யோவான் 17:9-20

17:9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
17:10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்,
17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
17:12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
17:13 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.
17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
17:15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
17:18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
17:19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.




Related Topics



நமக்காக யாரும் இல்லை ஆனால் ஒருவர் இருக்கிறார்-Rev. M. ARUL DOSS

1. தேற்றுவதற்கு ஒருவருமில்லை  பிரசங்கி 4:1 ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர் களைத் தேற்றுவாரில்லை. புலம்பல் 1:2,9,17,21 தேற்றுவாரில்லை ஆனால்...
Read More



நான் , அவர்களுக்காக , வேண்டிக்கொள்ளுகிறேன்; , உலகத்துக்காக , வேண்டிக்கொள்ளாமல் , நீர் , எனக்குத் , தந்தவர்களுக்காக , வேண்டிக்கொள்ளுகிறேன்; , அவர்கள் , உம்முடையவர்களாயிருக்கிறார்களே , யோவான் 17:9 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 17 TAMIL BIBLE , யோவான் 17 IN TAMIL , யோவான் 17 9 IN TAMIL , யோவான் 17 9 IN TAMIL BIBLE , யோவான் 17 IN ENGLISH , TAMIL BIBLE John 17 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 17 TAMIL BIBLE , John 17 IN TAMIL , John 17 9 IN TAMIL , John 17 9 IN TAMIL BIBLE . John 17 IN ENGLISH ,