யோவான் 15:1-10

15:1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
15:2 என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
15:3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
15:6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
15:9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.




Related Topics



நிலைத்திருங்கள்-Rev. M. ARUL DOSS

யோவான் 15:1-10 1. கர்த்தரில் நிலைத்திருங்கள் யோவான் 15:4-6 என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில்...
Read More



நான் , மெய்யான , திராட்சச்செடி , என் , பிதா , திராட்சத் , தோட்டக்காரர் , யோவான் 15:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 15 TAMIL BIBLE , யோவான் 15 IN TAMIL , யோவான் 15 1 IN TAMIL , யோவான் 15 1 IN TAMIL BIBLE , யோவான் 15 IN ENGLISH , TAMIL BIBLE John 15 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 15 TAMIL BIBLE , John 15 IN TAMIL , John 15 1 IN TAMIL , John 15 1 IN TAMIL BIBLE . John 15 IN ENGLISH ,