யோவான் 13:1-7

13:1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
13:2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
13:3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
13:4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
13:5 பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
13:6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
13:7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.




Related Topics



மேசியாவின் அடிமைப்பணி -Rev. Dr. J .N. மனோகரன்

பெரும்பாலான கலாச்சாரங்களில், எழுதப்படாத சட்டங்கள், விதிமுறைகள் அல்லது நெறிமுறைகள் உள்ளன.   ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவர் உல்லாச ஊர்தியில்...
Read More



பஸ்கா , பண்டிகைக்கு , முன்னே , இயேசு , இவ்வுலகத்தை , விட்டுப் , பிதாவினிடத்திற்குப் , போகும்படியான , தம்முடைய , வேளை , வந்ததென்று , அறிந்து , தாம் , இவ்வுலகத்திலிருக்கிற , தம்முடையவர்களிடத்தில் , அன்புவைத்தபடியே , முடிவுபரியந்தமும் , அவர்களிடத்தில் , அன்புவைத்தார் , யோவான் 13:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 13 TAMIL BIBLE , யோவான் 13 IN TAMIL , யோவான் 13 1 IN TAMIL , யோவான் 13 1 IN TAMIL BIBLE , யோவான் 13 IN ENGLISH , TAMIL BIBLE John 13 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 13 TAMIL BIBLE , John 13 IN TAMIL , John 13 1 IN TAMIL , John 13 1 IN TAMIL BIBLE . John 13 IN ENGLISH ,