யோவான் 1:29-36

1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
1:31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.
1:32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
1:33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.
1:34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.
1:35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
1:36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.




Related Topics


மறுநாளிலே , யோவான் , இயேசுவைத் , தன்னிடத்தில் , வரக்கண்டு: , இதோ , உலகத்தின் , பாவத்தைச் , சுமந்துதீர்க்கிற , தேவ , ஆட்டுக்குட்டி , யோவான் 1:29 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 1 TAMIL BIBLE , யோவான் 1 IN TAMIL , யோவான் 1 29 IN TAMIL , யோவான் 1 29 IN TAMIL BIBLE , யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE John 1 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 1 TAMIL BIBLE , John 1 IN TAMIL , John 1 29 IN TAMIL , John 1 29 IN TAMIL BIBLE . John 1 IN ENGLISH ,