யோபு 1:1-8

1:1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
1:2 அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.
1:3 அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
1:4 அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்.
1:5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
1:6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
1:7 கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
1:8 கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.




Related Topics



கர்த்தர் அறிந்திருக்கிறார்-Rev. M. ARUL DOSS

  சங்கீதம் 139:1 (1-24)  கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்; உட்காருதல் எழுந்திருக்குதல் அறிந்திருக்கிறீர். 1. நம்புகிறவர்களை...
Read More



ஊத்ஸ் , தேசத்திலே , யோபு , என்னும்பேர்கொண்ட , ஒரு , மனுஷன் , இருந்தான்; , அந்த , மனுஷன் , உத்தமனும் , சன்மார்க்கனும் , தேவனுக்குப் , பயந்துபொல்லாப்புக்கு , விலகுகிறவனுமாயிருந்தான் , யோபு 1:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 1 TAMIL BIBLE , யோபு 1 IN TAMIL , யோபு 1 1 IN TAMIL , யோபு 1 1 IN TAMIL BIBLE , யோபு 1 IN ENGLISH , TAMIL BIBLE JOB 1 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 1 TAMIL BIBLE , JOB 1 IN TAMIL , JOB 1 1 IN TAMIL , JOB 1 1 IN TAMIL BIBLE . JOB 1 IN ENGLISH ,