எரேமியா 42:7-15

42:7 பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.
42:8 அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகானானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து,
42:9 அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,
42:10 நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.
42:11 நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,
42:12 அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
42:13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும்,
42:14 நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,
42:15 யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.




Related Topics



ஆலோசனை வேண்டுமா?-Rev. Dr. J .N. மனோகரன்

உலகளாவிய வலையில் (World wide Web) தேடல் அல்லது பிற தேடுபொறிகளைப் பயன்படுத்தி எவ்வித விஷயத்திற்கும் இலவசமாக ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும்;...
Read More



பத்துநாள் , சென்றபின்பு , கர்த்தருடைய , வார்த்தை , எரேமியாவுக்கு , உண்டாயிற்று , எரேமியா 42:7 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 42 TAMIL BIBLE , எரேமியா 42 IN TAMIL , எரேமியா 42 7 IN TAMIL , எரேமியா 42 7 IN TAMIL BIBLE , எரேமியா 42 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 42 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 42 TAMIL BIBLE , JEREMIAH 42 IN TAMIL , JEREMIAH 42 7 IN TAMIL , JEREMIAH 42 7 IN TAMIL BIBLE . JEREMIAH 42 IN ENGLISH ,