ஏசாயா 59:12-18

59:12 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
59:13 கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.
59:14 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
59:15 சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
59:16 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.
59:17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
59:18 கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார், தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தை சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத் தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.




Related Topics



நம்மைத் தாங்கும் கர்த்தர்-Rev. M. ARUL DOSS

ஏசாயா 46:3,4 தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். 1. கரத்தினால் நம்மைத்...
Read More



எங்கள் , மீறுதல்கள் , உமக்கு , முன்பாக , மிகுதியாயிருந்து , எங்கள் , பாவங்கள் , எங்களுக்கு , விரோதமாய்ச் , சாட்சிசொல்லுகிறது , எங்கள் , மீறுதல்கள் , எங்களோடே , இருக்கிறது; , எங்கள் , அக்கிரமங்களை , அறிந்திருக்கிறோம் , ஏசாயா 59:12 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 59 TAMIL BIBLE , ஏசாயா 59 IN TAMIL , ஏசாயா 59 12 IN TAMIL , ஏசாயா 59 12 IN TAMIL BIBLE , ஏசாயா 59 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 59 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 59 TAMIL BIBLE , ISAIAH 59 IN TAMIL , ISAIAH 59 12 IN TAMIL , ISAIAH 59 12 IN TAMIL BIBLE . ISAIAH 59 IN ENGLISH ,