எபிரெயர் 3:7-14

3:7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,
3:8 வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
3:9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
3:10 ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;
3:11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
3:12 சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
3:14 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.




Related Topics


ஆகையால் , பரிசுத்த , ஆவியானவர் , சொல்லுகிறபடியே , இன்று , அՠΰுடைய , சத்தத்தைக் , கேட்பீர்களாகοல் , , எபிரெயர் 3:7 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 3 TAMIL BIBLE , எபிரெயர் 3 IN TAMIL , எபிரெயர் 3 7 IN TAMIL , எபிரெயர் 3 7 IN TAMIL BIBLE , எபிரெயர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 3 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 3 TAMIL BIBLE , Hebrews 3 IN TAMIL , Hebrews 3 7 IN TAMIL , Hebrews 3 7 IN TAMIL BIBLE . Hebrews 3 IN ENGLISH ,