எபிரெயர் 10:1-10

10:1 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
10:2 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
10:3 அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
10:4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
10:6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
10:7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
10:8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:
10:9 தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
10:10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.




Related Topics


இப்படியிருக்க , நியாயப்பிரமாணமானது , வரப்போகிற , நன்மைகளின் , பொருளாயிராமல் , அவைகளின் , நிழலாய்மாத்திரம் , இருக்கிறபடியால் , வருஷந்தோறும் , இடைவிடாமல் , செலுத்தப்பட்டுவருகிற , ஒரேவிதமான , பலிகளினாலே , அவைகளைச் , செலுத்த , வருகிறவர்களை , ஒருக்காலும் , பூரணப்படுத்தமாட்டாது , எபிரெயர் 10:1 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 10 TAMIL BIBLE , எபிரெயர் 10 IN TAMIL , எபிரெயர் 10 1 IN TAMIL , எபிரெயர் 10 1 IN TAMIL BIBLE , எபிரெயர் 10 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 10 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 10 TAMIL BIBLE , Hebrews 10 IN TAMIL , Hebrews 10 1 IN TAMIL , Hebrews 10 1 IN TAMIL BIBLE . Hebrews 10 IN ENGLISH ,