ஆதியாகமம் 11:1-9

11:1 பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
11:2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
11:3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
11:4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
11:5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.
11:6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
11:7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
11:8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
11:9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.




Related Topics



நமக்குப் பெயர் உண்டாக்குவோம்!-Rev. Dr. J .N. மனோகரன்

நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம்! இந்த ஆசைதான் மக்களை ஏதாவது செய்ய தூண்டுகிறது. கின்னஸ் உலக சாதனை பதிவுகள் பல சாதனைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சில...
Read More




அதிக உயரத்தில் ஏறுதல் -Rev. Dr. J .N. மனோகரன்

தைஷான் மலை சீனாவின் மிகவும் பிரபலமான புனித மலை. இது அறியப்பட்ட மற்றும் பல புனித மரங்களைக் கொண்டுள்ளது; சைப்ரஸ், சோஃபோரா ஜபோனிகா மற்றும் பைன் என பல...
Read More



பூமியெங்கும் , ஒரே , பாஷையும் , ஒரேவிதமான , பேச்சும் , இருந்தது , ஆதியாகமம் 11:1 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 11 TAMIL BIBLE , ஆதியாகமம் 11 IN TAMIL , ஆதியாகமம் 11 1 IN TAMIL , ஆதியாகமம் 11 1 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 11 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 11 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 11 TAMIL BIBLE , Genesis 11 IN TAMIL , Genesis 11 1 IN TAMIL , Genesis 11 1 IN TAMIL BIBLE . Genesis 11 IN ENGLISH ,