யாத்திராகமம் 17:1-7

17:1 பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
17:2 அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
17:3 ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.
17:4 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
17:5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
17:6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
17:7 இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.




Related Topics



ஆசை விவாகரத்தை தூண்டுகிறது -Rev. Dr. J .N. மனோகரன்

குர்குரே என்பது அரிசி, பருப்பு மற்றும் சோளத்தால் செய்யப்பட்ட ஒரு மொறுமொறுப்பான மசாலா பஃப்கார்ன் சிற்றுண்டியாகும்.  ஒரு பெண் தன் கணவன் தனக்கு...
Read More



பின்பு , இஸ்ரவேல் , புத்திரராகிய , சபையார் , எல்லாரும் , கர்த்தருடைய , கட்டளையின்படியே , சீன்வனாந்தரத்திலிருந்து , புறப்பட்டு , பிரயாணம்பண்ணி , ரெவிதீமிலே , வந்து , பாளயமிறங்கினார்கள்; , அங்கே , ஜனங்களுக்குக் , குடிக்கத் , தண்ணீர் , இல்லாதிருந்தது , யாத்திராகமம் 17:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 17 TAMIL BIBLE , யாத்திராகமம் 17 IN TAMIL , யாத்திராகமம் 17 1 IN TAMIL , யாத்திராகமம் 17 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 17 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 17 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 17 TAMIL BIBLE , Exodus 17 IN TAMIL , Exodus 17 1 IN TAMIL , Exodus 17 1 IN TAMIL BIBLE . Exodus 17 IN ENGLISH ,