யாத்திராகமம் 10:21-33

10:21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
10:22 மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.
10:23 மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.
10:24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.
10:25 அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
10:26 எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
10:27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
10:28 பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.
10:29 அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.




Related Topics



ஜோதிடம், சூரிய கிரகணம் மற்றும் மரணம் -Rev. Dr. J .N. மனோகரன்

சமீபத்திய சூரிய கிரகணத்தைப் பற்றி கவலைப்பட்ட ஒரு அமெரிக்க ஜோதிட பெண்மணி தனது துணையை கத்தியால் குத்திக் கொன்றார், பின்னர் தனது இரண்டு குழந்தைகளை...
Read More



அப்பொழுது , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , தடவிக்கொண்டிருக்கத்தக்கதான , இருள் , எகிப்து , தேசத்தின்மேல் , உண்டாகும்படிக்கு , உன் , கையை , வானத்திற்கு , நேராக , நீட்டு , என்றார் , யாத்திராகமம் 10:21 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 10 TAMIL BIBLE , யாத்திராகமம் 10 IN TAMIL , யாத்திராகமம் 10 21 IN TAMIL , யாத்திராகமம் 10 21 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 10 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 10 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 10 TAMIL BIBLE , Exodus 10 IN TAMIL , Exodus 10 21 IN TAMIL , Exodus 10 21 IN TAMIL BIBLE . Exodus 10 IN ENGLISH ,