உபாகமம் 18:10-18

18:10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
18:11 மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
18:12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
18:13 உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.
18:14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
18:15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
18:16 ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
18:17 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.




Related Topics



அனுமதி இல்லை!-Rev. Dr. J .N. மனோகரன்

'இங்கு ஜனங்கள் நுழைய தடை' என்பது போன்ற அறிவிப்பு பலகைகளை நாம் கண்டிருப்போம். ஆதாம் மற்றும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்திற்குள் அனுமதி...
Read More



தன் , மகனையாவது , தன் , மகளையாவது , தீக்கடக்கப்பண்ணுகிறவனும் , குறிசொல்லுகிறவனும் , நாள்பார்க்கிறவனும் , அஞ்சனம் , பார்க்கிறவனும் , சூனியக்காரனும் , , உபாகமம் 18:10 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 18 TAMIL BIBLE , உபாகமம் 18 IN TAMIL , உபாகமம் 18 10 IN TAMIL , உபாகமம் 18 10 IN TAMIL BIBLE , உபாகமம் 18 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 18 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 18 TAMIL BIBLE , DEUTERONOMY 18 IN TAMIL , DEUTERONOMY 18 10 IN TAMIL , DEUTERONOMY 18 10 IN TAMIL BIBLE . DEUTERONOMY 18 IN ENGLISH ,