தானியேல் 1:8-16

1:8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
1:9 தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
1:10 பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.
1:11 அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
1:12 பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
1:13 எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.
1:14 அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
1:15 பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
1:16 ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.




Related Topics



சமகால பரிசுத்தவான்-Rev. Dr. J .N. மனோகரன்

வரலாற்றில் மூன்று மிக நீதியுள்ள மனிதர்களில், நோவா மற்றும் யோபுவுடன் சேர்ந்து தானியேலும் பட்டியலிடப்பட்டார்.  "நோவாவும் தானியேலும் யோபும்...
Read More



தானியேல் , ராஜாவின் , போஜனத்தினாலும் , அவர் , பானம்பண்ணும் , திராட்சரசத்தினாலும் , தன்னைத் , தீட்டுப்படுத்தலாகாதென்று , தன் , இருதயத்தில் , தீர்மானம்பண்ணிக்கொண்டு , தன்னைத் , தீட்டுப்படுத்தாதபடி , பிரதானிகளின் , தலைவனிடத்தில் , வேண்டிக்கொண்டான் , தானியேல் 1:8 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 1 TAMIL BIBLE , தானியேல் 1 IN TAMIL , தானியேல் 1 8 IN TAMIL , தானியேல் 1 8 IN TAMIL BIBLE , தானியேல் 1 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 1 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 1 TAMIL BIBLE , DANIEL 1 IN TAMIL , DANIEL 1 8 IN TAMIL , DANIEL 1 8 IN TAMIL BIBLE . DANIEL 1 IN ENGLISH ,