அப்போஸ்தலருடையநடபடிகள் 6:1-11

6:1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள்.
6:2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
6:3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
6:4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
6:5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனாகிய அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6:6 அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
6:7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
6:8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
6:9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.
6:10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
6:11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை எற்படுத்தி;




Related Topics



விசுவாசத்திற்கேற்ற கிரியை-Rev. Dr. C. Rajasekaran

கிரியையில்லா விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறார். விசுவாசமில்லாமல் தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியம் (எபிரேயர் 11:6). விசுவாசம்...
Read More



அந்நாட்களிலே , சீஷர்கள் , பெருகினபோது , கிரேக்கரானவர்கள் , தங்கள் , விதவைகள் , அன்றாட , விசாரணையில் , திட்டமாய் , விசாரிக்கப்படவில்லையென்று , எபிரெயருக்கு , விரோதமாய் , முறுமுறுத்தர்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 6:1 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 1 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE Acts 6 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 6 TAMIL BIBLE , Acts 6 IN TAMIL , Acts 6 1 IN TAMIL , Acts 6 1 IN TAMIL BIBLE . Acts 6 IN ENGLISH ,