அப்போஸ்தலருடையநடபடிகள் 5:1-12

5:1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
5:2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
5:3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன
5:4 அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5:5 அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
5:6 வாலிபர் எழுந்து, அவனைச் சேலையிலே சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்
5:7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
5:8 பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
5:9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
5:10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
5:11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
5:12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.




Related Topics



அனனியா மற்றும் சப்பீராளின் பாவம்-Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சோகமான நிகழ்வுகளில் ஒன்று;  அனனியா மற்றும் சப்பீராள் தம்பதியினரின் செயல். அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்...
Read More



அனனியா , என்னும் , பேருள்ள , ஒருவனும் , அவன் , மனைவியாகிய , சப்பீராளும் , தங்கள் , காணியாட்சியை , விற்றார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 5:1 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 5 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 5 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 5 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 5 1 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 5 IN ENGLISH , TAMIL BIBLE Acts 5 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 5 TAMIL BIBLE , Acts 5 IN TAMIL , Acts 5 1 IN TAMIL , Acts 5 1 IN TAMIL BIBLE . Acts 5 IN ENGLISH ,