அப்போஸ்தலருடையநடபடிகள் 19:11-20

19:11 பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.
19:12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
19:13 அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
19:14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
19:15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
19:16 பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
19:17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
19:18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
19:19 மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
19:20 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.




Related Topics



தேவ நாமத்தை வீணாக பயன்படுத்தாதீர்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு மாலில் டீனேஜர்களுக்கான விளையாட்டுப் பிரிவு உள்ளது. அங்கு அவர்கள் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். விளையாட்டு...
Read More



பவுலின் , கைகளினாலே , தேவன் , விசேஷித்த , அற்புதங்களைச் , செய்தருளினார் , அப்போஸ்தலருடையநடபடிகள் 19:11 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 11 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 11 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 19 IN ENGLISH , TAMIL BIBLE Acts 19 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 19 TAMIL BIBLE , Acts 19 IN TAMIL , Acts 19 11 IN TAMIL , Acts 19 11 IN TAMIL BIBLE . Acts 19 IN ENGLISH ,