அப்போஸ்தலருடையநடபடிகள் 1:16-26

1:16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
1:17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.
1:18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
1:19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.
1:20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
1:21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
1:22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
1:23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
1:24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
1:25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
1:26 பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.




Related Topics


சகோதரரே , இயேசுவைப் , பிடித்தவர்களுக்கு , வழிகாட்டின , யூதாசைக்குறித்துப் , பரிசுத்த , ஆவி , தாவீதின் , வாக்கினால் , முன் , சொன்ன , வேதவாக்கியம் , நிறைவேறவேண்டியதாயிருந்தது , அப்போஸ்தலருடையநடபடிகள் 1:16 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 16 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 16 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 IN ENGLISH , TAMIL BIBLE Acts 1 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 1 TAMIL BIBLE , Acts 1 IN TAMIL , Acts 1 16 IN TAMIL , Acts 1 16 IN TAMIL BIBLE . Acts 1 IN ENGLISH ,