ஏசாயா 5:1-10

5:1 இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
5:2 அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
5:3 எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
5:4 நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?
5:5 இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.
5:6 அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.
5:7 சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.
5:8 தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!
5:9 சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.
5:10 பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.




Related Topics



எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி-T. Job Anbalagan

நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக. ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன...
Read More



இப்பொழுது , நான் , என் , நேசரிடத்தில் , அவருடைய , திராட்சத்தோட்டத்தைக் , குறித்து , என் , நேசருக்கேற்ற , ஒரு , பாட்டைப் , பாடுவேன்; , என் , நேசருக்கு , மகா , செழிப்பான , மேட்டிலே , ஒரு , திராட்சத்தோட்டம் , உண்டு , ஏசாயா 5:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 5 TAMIL BIBLE , ஏசாயா 5 IN TAMIL , ஏசாயா 5 1 IN TAMIL , ஏசாயா 5 1 IN TAMIL BIBLE , ஏசாயா 5 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 5 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 5 TAMIL BIBLE , ISAIAH 5 IN TAMIL , ISAIAH 5 1 IN TAMIL , ISAIAH 5 1 IN TAMIL BIBLE . ISAIAH 5 IN ENGLISH ,