எபேசியர் 6:10-17

6:10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
6:11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
6:13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
6:14 சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
6:15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
6:16 பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
6:17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.




Related Topics



தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு சீஷன்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு நாட்டின் சிப்பாய் எப்படி முழு கவசம் அணிந்து ஆயத்தமாக இருப்பானோ அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சாத்தானுக்கும் அவனுடைய பிசாசின்...
Read More



கடைசியாக , என் , சகோதரரே , கர்த்தரிலும் , அவருடைய , சத்துவத்தின் , வல்லமையிலும் , பலப்படுங்கள் , எபேசியர் 6:10 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 6 TAMIL BIBLE , எபேசியர் 6 IN TAMIL , எபேசியர் 6 10 IN TAMIL , எபேசியர் 6 10 IN TAMIL BIBLE , எபேசியர் 6 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 6 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 6 TAMIL BIBLE , Ephesians 6 IN TAMIL , Ephesians 6 10 IN TAMIL , Ephesians 6 10 IN TAMIL BIBLE . Ephesians 6 IN ENGLISH ,