2சாமுவேல் 6:1-11

6:1 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
6:2 கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
6:3 தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
6:4 அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
6:5 தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.
6:6 அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
6:7 அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
6:8 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.
6:9 தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,
6:10 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.
6:11 கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.




Related Topics



ஊசாவின் மரணம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஏலி ஆசாரியனாக இருந்தபோது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி  பெலிஸ்தியர்களால் கைப்பற்றப்பட்டது, கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில்...
Read More



பின்பு , தாவீது , இஸ்ரவேலர் , எல்லாருக்குள்ளும் , தெரிந்துகொள்ளப்பட்ட , முப்பதினாயிரம்பேரைக் , கூட்டி , , 2சாமுவேல் 6:1 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 6 TAMIL BIBLE , 2சாமுவேல் 6 IN TAMIL , 2சாமுவேல் 6 1 IN TAMIL , 2சாமுவேல் 6 1 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 6 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 6 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 6 TAMIL BIBLE , 2SAMUEL 6 IN TAMIL , 2SAMUEL 6 1 IN TAMIL , 2SAMUEL 6 1 IN TAMIL BIBLE . 2SAMUEL 6 IN ENGLISH ,