2சாமுவேல் 16:5-13

16:5 தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
16:6 சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
16:7 சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
16:8 சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்: நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
16:9 அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
16:10 அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
16:11 பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
16:12 ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
16:13 அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.




Related Topics



காரணமில்லாத சாபங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு; காகங்களின் சாபத்தால் விலங்குகள் சாவதில்லை.  பறவைகள் அல்லது விலங்குகளின் சத்தங்கள் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தைக்...
Read More




காயப்பட்டு நிற்க உரிமை ஏது? -Rev. Dr. J .N. மனோகரன்

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இந்த...
Read More



தாவீதுராஜா , பகூரிம்மட்டும் , வந்தபோது , இதோ , சவுல் , வீட்டு , வம்சத்தானாயிருக்கிற , கேராவின் , குமாரனாகிய , சீமேயி , என்னும் , பேருள்ள , ஒரு , மனுஷன் , அங்கேயிருந்து , புறப்பட்டு , தூஷித்துக்கொண்டே , நடந்துவந்து , , 2சாமுவேல் 16:5 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 16 TAMIL BIBLE , 2சாமுவேல் 16 IN TAMIL , 2சாமுவேல் 16 5 IN TAMIL , 2சாமுவேல் 16 5 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 16 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 16 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 16 TAMIL BIBLE , 2SAMUEL 16 IN TAMIL , 2SAMUEL 16 5 IN TAMIL , 2SAMUEL 16 5 IN TAMIL BIBLE . 2SAMUEL 16 IN ENGLISH ,