2கொரிந்தியர் 9:1-8

9:1 பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
9:2 உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.
9:3 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.
9:4 மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
9:5 ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
9:6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.




Related Topics


பரிசுத்தவான்களுக்குச் , செய்யவேண்டிய , தர்மசகாயத்தைக்குறித்து , நான் , அதிகமாக , உங்களுக்கு , எழுதவேண்டுவதில்லை , 2கொரிந்தியர் 9:1 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 9 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 9 IN TAMIL , 2கொரிந்தியர் 9 1 IN TAMIL , 2கொரிந்தியர் 9 1 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 9 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 9 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 9 TAMIL BIBLE , 2Corinthians 9 IN TAMIL , 2Corinthians 9 1 IN TAMIL , 2Corinthians 9 1 IN TAMIL BIBLE . 2Corinthians 9 IN ENGLISH ,