2கொரிந்தியர் 5:11-21

5:11 ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
5:12 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
5:13 நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும்.
5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
5:15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
5:18 இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
5:19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
5:20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.




Related Topics



நானே வாசல்-Rev. Dr. J .N. மனோகரன்

பழைய நாட்களில், ஆடுகளுக்கான தொழுவம் அல்லது அடைப்பு ஒரு நுழைவாயிலுடன் திறந்த வயல்களில் வட்ட வேலியைக் கொண்டிருந்தது. தொழுவத்தின் வாசலில் மேய்ப்பன்...
Read More



ஆகையால் , கர்த்தருக்கு , பயப்படத்தக்கதென்று , அறிந்து , மனுஷருக்குப் , புத்திசொல்லுகிறோம்; , தேவனுக்கு , முன்பாக , வெளியரங்கமாயிருக்கிறோம்; , உங்கள் , மனச்சாட்சிக்கும் , வெளியரங்கமாயிருக்கிறோம் , என்று , நம்புகிறேன் , 2கொரிந்தியர் 5:11 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 5 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN TAMIL , 2கொரிந்தியர் 5 11 IN TAMIL , 2கொரிந்தியர் 5 11 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 5 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 5 TAMIL BIBLE , 2Corinthians 5 IN TAMIL , 2Corinthians 5 11 IN TAMIL , 2Corinthians 5 11 IN TAMIL BIBLE . 2Corinthians 5 IN ENGLISH ,