1தீமோத்தேயு 6:12-19

6:12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
6:13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,
6:14 எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
6:15 அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
6:17 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
6:18 நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
6:19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு,




Related Topics



பற்றிக்கொள்ளுங்கள்-Rev. M. ARUL DOSS

வெளிப். 3:11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. வெளிப். 2:25; ரூத் 1:14 1....
Read More



விசுவாசத்தின் , நல்ல , போராட்டத்தைப் , போராடு , நித்தியஜீவனைப் , பற்றிக்கொள்; , அதற்காகவே , நீ , அழைக்கப்பட்டாய்; , அநேக , சாட்சிகளுக்கு , முன்பாக , நல்ல , அறிக்கை , பண்ணினவனுமாயிருக்கிறாய் , 1தீமோத்தேயு 6:12 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 6 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 6 IN TAMIL , 1தீமோத்தேயு 6 12 IN TAMIL , 1தீமோத்தேயு 6 12 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 6 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 6 TAMIL BIBLE , 1Timothy 6 IN TAMIL , 1Timothy 6 12 IN TAMIL , 1Timothy 6 12 IN TAMIL BIBLE . 1Timothy 6 IN ENGLISH ,