1சாமுவேல் 2:1-8

2:1 அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
2:2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
2:3 இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?
2:4 பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.
2:5 திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.
2:6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
2:7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
2:8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.




Related Topics


அப்பொழுது , அன்னாள் , ஜெபம் , பண்ணி: , என் , இருதயம் , கர்த்தருக்குள் , களிகூருகிறது; , என் , கொம்பு , கர்த்தருக்குள் , உயர்ந்திருக்கிறது; , என் , பகைஞரின்மேல் , என் , வாய் , திறந்திருக்கிறது; , உம்முடைய , இரட்சிப்பினாலே , சந்தோஷப்படுகிறேன் , 1சாமுவேல் 2:1 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 2 TAMIL BIBLE , 1சாமுவேல் 2 IN TAMIL , 1சாமுவேல் 2 1 IN TAMIL , 1சாமுவேல் 2 1 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 2 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 2 TAMIL BIBLE , 1SAMUEL 2 IN TAMIL , 1SAMUEL 2 1 IN TAMIL , 1SAMUEL 2 1 IN TAMIL BIBLE . 1SAMUEL 2 IN ENGLISH ,