யாரால் முடியும்?
1. பிரிப்பவன் யார்? (அவருடைய அன்பைவிட்டு) 2. பறிப்பவன் யார்? (அவருடைய கரத்தில் இருந்து) 3. மறிப்பவன் யார்? (அவரை எதிர்த்து) 4. தரிப்பவன் யார்? (அவருடைய கோபத்துக்கு) 5. தடுப்பவன் யார்? (அவர் செய்கிறதை) Author: Rev. M. Arul Doss
ரோமர் 8:36-39 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ?... வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்.
யோவான் 10:27-29 நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக் கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையில் இருந்து பறித்துக்கொள்வதுமில்லை
யோவான் 10:18 ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துகொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.
யோபு 9:10-13 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
நாகூம் 1:1-7 அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்?
சங்கீதம் 76:7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
ஏசாயா 43:11-14 நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
அப்போஸ்தலர் 11:17 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தையே அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கி றதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.
Author: Rev. M. ARUL DOSS