உபவாசம் இருந்தவர்கள்
1. மோசேயின் உபவாசம் (40 நாட்கள்) இருமுறை 2. இயேசுவின் உபவாசம் (40 நாட்கள்) 3. தானியேலின் உபவாசம் (21 நாட்கள்) 4. யாபேஸ் பட்டணத்தாரின் உபவாசம் (7 நாட்கள்) 5. எஸ்தர் மற்றும் யூதர்களின் உபவாசம் (3 நாட்கள்) Author: Rev. M. Arul Doss
யாத்திராகமம் 24:18; 34:28; 32:15-16 உபாகமம் 9:18,25 அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும்பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்...
உபாகமம் 10:1-10 முந்தின பிரகாரமாகவே நாற்பது நாள் இரவும் பகலும் மலையிலே இருந்தான்.
மத்தேயு 4:2(1-11) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
தானியேல் 9:3-21; தானியேல் 10:2-3 தானியேல் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட அவன் முகத்தை அவருக்கு நேராக்கினான்.
1சாமுவேல் 31:13(1-13) பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது... சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
எஸ்தர் 4:16(1-17) நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவர செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்...
2நாளாகமம் 20:3 யோசபாத்- யூதா ஜனங்களின் உபவாசம்
யோனா 3:5-10 நினிவே மக்களின் உபவாசம்
நெகேமியா 1:4 நெகேமியாவின் உபவாசம் (எருசலேமுக்காக)
அப்போஸ்தலர் 10:30(1-33) கொர்நேலியுவின் உபவாசம்
லூக்கா 2:36-38 84 வயதுள்ள அன்னாளின் உபவாசம்
Author: Rev. M. ARUL DOSS