முடியாத ஒன்று
யோபு 5:9; 9:10 ஆராய்ந்து முடியாத காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1. அவருடைய இலக்கம் ஆராய்ந்து முடியாது 2. அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது 3. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது 4. அவருடைய அதிசயம் விவரிக்க முடியாது 5. அவருடைய சத்தத்தை தவிர்க்க முடியாது Author: Rev. M. Arul Doss
யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
சங்கீதம் 102:24 என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளா தேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
சங்கீதம் 90:4; 2பேதுரு 3:8
சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக் கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
யாத்திராகமம் 15:11; உபாகமம் 10:17; 1நாளாகமம் 29:11; நெகேமியா 1:5; யோபு 36:5; சங்கீதம் 47:2; சங்கீதம் 86:10; சங்கீதம் 92:5; தானியேல் 4:3
ஏசாயா 40:28(27-30) பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தரா கிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
லூக்கா 2:47 அவர் (இயேசு) பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தி யையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்து பிரமித்தார்கள்.
சங்கீதம் 40:5 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக் கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. 1நாளாகமம் 16:24; சங்கீதம் 72:11; சங்கீதம் 77:14; சங்கீதம் 86:10; சங்கீதம் 96:3; சங்கீதம் 98:1; சங்கீதம் 105:2; சங்கீதம் 136:4
யோபு 37:4 (1-7) அதற்கு பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
Author: Rev. M. ARUL DOSS