வெளிப்படுத்தின விசேஷம் 9- விளக்கவுரை
9 ம் அதிகாரம் ஐந்தாம் ஆறாம் எக்காளங்கள் அதி, 9 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொமுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. விழுந்தது நட்சத்திரமல்ல, ஒரு தூதன். அவனுக்கு என்று அடுத்து வருவதால் அது ஒரு நட்சத்திரமல்ல, சாத்தானோடு பூமியில் தள்ளப்பட்ட தூதர்களில் ஒருவன், பாதாளக்குழி:- அதற்குள் பிசாசின் தூதர்களின் ஆவிகள் அடைக்கப்பட்டிருந்தன. திறவுகோல் கொடுக்கப்பட்ட தூதன் குழியைத் திறந்த பொழுது பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று. அந்தக்குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. (சோதோம் கொமோராவை தேவன் அழித்த போது அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. ஆதி. 19:28.) அந்தப்புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின் மேல் வந்தன. பிசாசுகள் அசுத்த ஆவிகள். அவைகளுக்கு உடலோ, உருவமோ கிடையாது. அதனால்தான் லேகியோனுக்குள்ளிருந்த ஆயிரக்கணக்கான பிசாசுகள் தங்களுக்கு ஒரு உடல் வேண்டுமென்பதால்தான் இயேசுவிடம் பன்றிகளுக்குள் போக அனுமதி கேட்டன. ஆகவே இந்த குழியிலிருந்து திறந்துவிடப்பட்ட பிசாசின் ஆவிகளுக்கு வெட்டுக்கிளி போன்ற உருவம் கொடுக்கப்பட்டது. அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக் கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. (பிசாசுகளுக்கு ஒரு வல்லமையும் கிடையாது, அவைகளுக்கு வல்லமை கொடுக்கப்பட வேண்டும்) ஆனாலும் அவைகளின் வல்லமைக்கு ஒரு எல்லையை தேவன் நியமித்தார். (யோபு 1:12) பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும், எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. (பிசாசுகள் தேவனை மீறி ஒன்றும் செய்ய முடியாது, அவருடைய பாதுகாப்பில் உள்ள அவரது பிள்ளைகளை பிசாசு தானாகத் தொட முடியாது), பன்றிகளுக்குள் போகவும் பிசாசுக்கு தேவ அனுமதி வேண்டும். வ 5 மேலும் அவர்களைக் கொலை செய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப் படாமல், ஐந்து மாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஏன் கொலை செய்ய அனுமதிக்கவில்லை? கிறிஸ்துவைப் புறக்கணித்தவர்கள் வேதனையினின்று விடுபட்டு எளிதில் மரணமடைந்து விடாமல் வாதிக்கப்பட வேண்டும். ஐந்து மாதக்கால அளவு ஏன்? சாதாரண வெட்டுக்கிளிகள் ஐந்து மாதம் வாழ்ந்து மரித்து விடும். (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ஆகவே இவைகளுக்கும் 5 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கலாம், அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும் போது உண்டாகும் வேதனையைப் போலிருக்கும். வ 6 அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்; சாக வேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். சாவை விரும்பும் அளவிற்கு வாழ்க்கை கசப்பாகும்; மனவேதனை தாங்க முடியாததாயிருக்கும். ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவிலே அணுகுண்டு போடப்பட்ட பொழுது, அங்கு பிழைத்தவர்கள் பலவித கொடிய வியாதிகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாயினர். சூம்பின உறுப்புகளோடும், வ 7-10 வெட்டுக்கிளிகளின் உருவம் 1) யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகள் போலிருந்தது; குதிரைகள் யுத்தத்திற்கு ஏற்றவை, பயப்படாதவை, பலமுள்ளவை. 2) அவைகளுடைய தலையின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன. அவன் ஜெயிப்பவனாக அனுப்பப்பட்டான். 3) அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலிருந்தன . மனுஷமுகம்: அறிவும் ஞானமுமுடையது. வெட்டுக்கிளிகளுக்கு அறிவும் ஞானமுமுண்டு. 4) அவைகளுடைய கூந்தல் ஸ்திரிகளுடைய கூந்தல் போலிருந்தது, கவர்ச்சியால் மயக்கி இழுப்பவை 6) இருப்புக் கவசங்களைப் போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; மனிதர்களால் அவைகளை அழிக்க முடியாது! 7) அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தது. வெட்டுக்கிளிகள் வேகமாகப்பறக்கக்கூடியவை, அத்தனை வெட்டுக்கிளிகள் இருந்ததால் ரதங்கள் ஓடும் சத்தம் போன்ற ஓலியெழுப்பின. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், வால்களில்கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன. 8) தேள்களின் கொடுக்குகளையுடைய வால்கள் கொடிய சவுக்குகள்போல் வேதனை உண்டாக்கும் ஆயுதம், ஐந்து மாதமளவும் சேதப்படுத்தும் அதிகாரம் பெற்றவை. வ 11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு. அவனுக்குப் பல பெயர்கள் உண்டு: அபெத்தோன், அப்பொல்லியோன், பிசாசு, சாத்தான், சோதனைக்காரன், சாத்தானுக்கு ஒரு ராஜ்யம் உண்டு என்று இயேசுவே சொன்னார் (லூக். 11:18) அது நித்தியமானதல்ல. அழிந்து போகுமொன்று. வ 12 முதலாம் ஆபத்து ஐந்து மாதங்களில் கடந்துபோயிற்று, இன்னும் இரண்டு ஆபத்துகள் வரவேண்டும். வ 13, 14, 15: ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து ஒரு சத்தந்தோன்றி எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி; ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொரு பங்கைக் கொல்லும்படிக்கு ஒரு மணி நேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள். எக்காளம் தொனிக்க தொனிக்க நாசமும், அழிவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 6 ம் அதிகாரத்தில் இயற்கையின்மேல்தான் அழிவு வந்தது வெட்டுக்கிளிகளுக்கு மனிதரை வாதிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டதே அல்லாமல் கொல்லுவதற்கு அல்ல. ஜபிராத்து நதி தூதர்களுக்கோ மனிதரில் மூன்றிலொரு பங்கைக் கொல்ல அனுமதி கிடைத்தது. ஒரு சத்தம் யாருடைய சத்தம் என்று தெரியவில்லை. ஆனால் தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள். இந்த தூதர்கள் கட்டப்பட்டிருந்ததினால், அவர்கள் சாத்தானின் தூதர்களே. தேவதாதர்கள் ஒருக்காலும் கட்டப்பட்டதேயில்லை ஐபிராத்து நதி:- ஏதேனில் பாய்ந்த பெரிய நதி, இதன் கரையில்தான் சாத்தான் ஏவாளை வஞ்சித்து தேவனைவிட்டுப் பிரித்தான். இந்த நதிக்கரையில்தான் காயீன் ஆபேலைக் கொன்றான். இந்த நதிக்கரையில்தான் நிம்ரோத் பாபிலோனைக் கட்டினான். இந்த பாபிலோனுக்குத்தான் இஸ்ரவேலர் 70 வருடங்கள் சிறைக் கைதிகளாகக் கொண்டு போகப்பட்டனர். இந்த பாபிலோன் மீண்டும் கட்டப்பட்டு, செழித்து அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிபீடமாகும் என்று கருதப்படுகிறது. அதனால்தான் இது “அருவருப்புகளின் தாய்” என்றழைக்கப்படுகிறது. (ஆனால் பாபிலோன் மறுபடியும் கட்டப்படப் போவதில்லையென்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருக்கிறார்கள்) ஆதி, 15:18ல் தேவன் ஆபிரகாமுக்கு இஸ்ரவேலின் எல்லையாக இந்த நதியை வைத்தார். இதையெல்லாம் அறிந்த சகோதரனே! உன் பொறுப்பு என்ன? அநேகரிடம் இயேசுவையும், வரப்போகும் அழிவையும் கூறி ஆத்தும ஆதாயப்பணியில் தீவிரமாய் ஈடுபடும். வ 16. 17, 18 குதிரைச் சேனை கட்டவிழ்க்கப்பட்ட நான்கு தூதர்களுக்கு ஆதரவாக 20 கோடி பிசாசுகள் குதிரைகள் மேலேறி புறப்பட்டன. இன்றைய உலக ஜனத்தொகை 760 கோடி என்று வைத்துக்கொள்வோம். 200 கோடி ஏற்கனவே அழிக்கப்பட்டனர். மீதியுள்ள 560 கோடியில் மூன்றிலொரு பங்கு கிட்டத்தட்ட 185 கோடி. இவர்களை அழிக்க சாத்தான் 20 கோடி குதிரைமேலேறினவர்களை அனுப்பினான். இவர்களை யோவான் தரிசனத்தில் கண்டான். அவர்கள் அக்கினி நிறமும்,நீலநிறமும், கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடையதலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன: அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும், புகையும், கந்தகமும் புறப்பட்டன. அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொரு பங்கு கொல்லப்பட்டார்கள், இந்த மாதிரிக் குதிரைகள் பூமியிலெங்கும் கிடையவே கிடையாது. இவைகளின் தோற்றம் மனிதரை அச்சசுறுத்துவதாக இருந்தது, வாய்களிலிருந்து புறப்பட்டவைகளால் மூன்றிலொரு பங்கு கொல்லப்பட்டார்கள். இவை அணுகுண்டு விஷப்புகை, ரசாயனக்குண்டாக இருக்கலாம். (இவை மூன்றும் ஈரானிடம் இருப்பதாக சந்தேகப்படுகிறார்கள்), 20 கோடி குதிரைகளும் ஒரே நேரத்தில் வந்ததாகக் கருதாமல், நான்கு கட்டங்களில், (ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம்), மக்களை அழித்த குதிரைகளின் எண்ணிக்கையாக இருக்கலாம் என்று சுவி, ஜாண் வெஸ்லி தன் விளக்க உரையில் கூறியிருக்கிறார். அப்படியே கொலை செய்யப்பட்டவர்களும் நான்கு கட்டங்களில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்கிறார். துன்பக்காலத்தில் மனந்திரும்பாதவர்களே, ஆயிர வருட ஆட்சியில் காணப்படாதபடி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு. வ 19 அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும், வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும் தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது. அவைகளாலே சேதப்படுத்துகிறது. இது அந்தக் குதிரைகள் முற்புறத்திலும், பின்புறத்திலும் கொல்ல வல்லமையுடையவைகளாக இருந்தன என்பது விளங்குகிறது. வ 20, 21 இந்த மகா வாதையைக்கண்ட மற்றவர்களோ மனந்திரும்பவில்லை! வழக்கம்போல வாழ்ந்து கொண்டிருந்தார்களேயொழிய, மனந்திரும்பவில்லை, இன்றும் அப்படி நிர்விசாரமாயிருக்கிற மக்களைப் பார்க்கிறோம். தினமும் விபத்துகளினால் மரணமடைந்தவர்களைக்குறித்து செய்தித்தாளில் வாசிக்கிறோம். இந்தச் செய்திகள் நாமும் எதிர்பாரா நேரத்தில் மரணமடையக் கூடும் என்று உணர்த்துகின்றன. யாராவது அதை எண்ணிப் பார்த்து மனந்திரும்பி பொருளாசை, இச்சைகள் மாம்சக் கிரியைகள் போன்றவற்றை விட்டு விலகி பரிசுத்தமடைய முயற்சிக்கிறோமா? இல்லையே! இன்னும் எத்தனைக் காலத்திற்கு இருபையின் ஆவியை நிந்தித்துக் கொண்டேயிருப்பீர்கள்? Author: Rev. S.C. Edison
5) அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள் போலிருந்தன சிங்கங்களின் பற்கள் குண்டு துளைக்க முடியாத முதலையின் தோலையும் கடித்து, கிழிக்கும் பெலனுடையவை,
இன்றும் இந்நதி முக்கியம் வாய்ந்ததாகவே உள்ளது. 1991ல் ஈராக்கிடமிருந்து குவைட்டை மீட்ட அமெரிக்கப்படைகள், யூப்ரடீஸ் (ஐபிராத்து) நதிக்கரையில்தான் ஈராக் படைகளை முறியடித்து வெற்றி கண்டன. இந்நதிக்கரையில்தான் வெளி. 9:15 நிறைவேறும் ஏனென்றால் கட்டப்பட்டிருந்த தூதர்கள் (பிசாசுகள்) அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. 6ம் அதிகாரத்திலுள்ள 4ம் முத்திரை நியாயத்தீர்ப்பினால் பூமியின் காற்பங்கு மனிதர்கள் பஞ்சத்தினாலும் பட்டயத்தினாலும், துஷ்டமிருகங்களினாலும் கொல்லப்பட்டார்கள். வெளி. 8:11ன்படி கசப்பான (கதிர் வீச்சினால் மாசுபட்ட) தண்ணீரைக் குடித்து அநேகர் மாண்டார்கள்.
Author: Rev. S.C. Edison