வெளிப்படுத்தின விசேஷம் 6-  விளக்கவுரை


அதிகாரம்- 6

‘ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைத்தல்’
‘The Lamb of God opening  seals’  

முத்திரைகளை உடைத்தல்
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்க்டேன்.(வச 1)

இந்த 6ஆம் அதிகாரத்தில் ஆட்டுக்குட்டியானவராகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏழு முத்திரைகளில் ஆறை உடைக்கிறார். ஒவ்வொரு முத்திரையும் உடைக்கப்படும்போதும் தேவ கோபம் இந்த உலகத்தில் நிறைவேற்றப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் உலகம் அந்திக்கிறிஸ்துவின் கைகளில் வந்துவிடுகிறது. கிறிஸ்துவின் சபையோ ஆண்டவரோடு இருக்கும்படியாக அவருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தில் காணப்படும் நிகழ்வுகள் 7 ஆண்டு உபத்திரவகாலத்தின் முதல் 3 ½ ஆண்டுகளில்; நடப்பவைகளாகும். திருச்சபை ஆண்டவரிடம் எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்து யோவானுக்கு இந்த அதிகாரத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. பின்வரும் அதிகாரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆவியானவருடைய ஒத்தாசையோடு இநத நிகழ்வுகள் கோர்வைபடுத்தப்பட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

வச 1,2 – முதல் முத்திரை உடைத்தல் - வெள்ளை குதிரை- White Horse

வெள்ளை குதிரையில் ஏறியிருப்பது சமாதானத்தைக் குறிக்கிறது. ஏறியிருப்பவன் கையிலுள்ள வில்லோ யுத்தத்தைக்குறிக்கிறது.
உலகத்தலைவர்கள் சமாதானத்தை பேசுவார்கள்.ஆனாலும் தந்திரமாக ஆயுதங்களை பெருக்குவார்கள். சமாதானப்பேச்சுகளை உலக நாடுகளோடு வல்லரசு நாடுகள் முன்னின்று நடத்தினாலும், இன்னொருபுறம் தங்களது அணு ஆயுதங்களை பெருக்கிக் கொண்டே போகிறார்கள். ஒரு வல்லரசு நாடு தனது உயர்ந்தரகப்படைகளை உலகமெங்கும் நிறுத்தியுள்ளதாக பிரபல செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ஆகவே உலகளாவிய பயங்கர யுத்தம் தவிர்க்க முடியாதது. எனவே, அந்திகிறிஸ்து உலகத் தலைவர்களோடு சமாதானப்பேச்சை தந்திரமாக முன்னின்று நடத்திப்பின்னர் உலகமுழுவதையும் கைப்பற்றுவான்.  1 தெச 5: 3
                                     
வச: 3,4 - இரண்டாம் முத்திரை உடைத்தல் – சிவப்பு குதிரை – Red Horse
சிகப்பு யுத்தங்களையும் இரத்தம் கொட்டப்படுதலையும குறிக்;கிறது. அந்தி கிறிஸ்துவினால் முயற்ச்சிசெய்யப்பட்ட சமாதானம் வராதபடியினாலே பல உள்நாட்டுக் கலவரங்களும் தேசங்களுக்குள் யுத்தங்களும் வெடிக்கும். இரத்த ஆறு ஓடும். அந்தி கிறிஸ்து பலவந்தமாக ஆட்சியை பிடிப்பான்.
                
வச: 5,6 - மூன்றாம் முத்திரை உடைத்தல்– கறுப்பு குதிரை – Black Horse
கறுப்பு தீமை, துக்கம் இவற்றையும், தராசு நெருக்கடி பற்றாக்குறையையும் காண்பிக்கும். உலகமெங்கும் பொருளாதார நெருக்கடியும் பஞ்சங்களும் தலைவிரித்தாடும். ஆகாரத்திற்கும் தண்ணீருக்கும் அளவோடு பங்கீடு செய்யும் முறை வரும். இந்த நிலமை இப்பொழுதே பல இடங்களில் அமுலுக்கு உள்ளது. உலகமெங்கிலும் 1.02 கோடி மக்களுக்கும் மேலானவர்கள் அனுதின ஆகாரம் கிடைக்காமல் அல்லலுற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஆகாரம் இல்லாமல் ஒரு குழந்தை சாகிறது. புலம்பல் 5: 10, எசே 4: 16, 17
அந்தி கிறிஸ்து தனது 666 முத்திரையை அறிமுகப்படுத்துவான். வெளி 13: 16- 18
இந்த காலக்கட்டத்தில் உத்தம கிறிஸ்தவர்கள் அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள்.

வச: 7,8  - நான்காம் முத்திரை உடைத்தல் – மங்கின குதிரை – Pale Horse
மங்கிப்போன நிறம் பெலவீனத்தையும், வியாதி மரணத்தையும் குறிக்கிறது. பலவிதங்களில் அழிவு பெருகும்.பஞ்சம், கொள்ளை நோய் இவற்றினால் பெருமளவில் சாவு எண்ணிக்கை உலக முழுதும் உயரும். எசேக்கியேல் 5: 16, 17 அந்தி கிறிஸ்து தந்திரமாக இஸ்ரவேல் தேசத்துடன் சமாதான உடன்படிக்கை செய்வான். இஸ்ரவேலர் எருசலேமில் தங்கள் தேவாலயத்தைக் கட்டுவார்கள்.

வச: 9– 11 –ஐந்தாம் முத்திரை உடைத்தல்
உபத்திரவ காலத்தைக் கடந்து வந்த இரத்தசாட்சிகளுடைய கூக்குரல் தேவனுடைய சிங்காசனத்தில் கேட்டது. வெளி 4: 6 –கண்ணாடிக்கடல் இந்த இரத்தசாட்சிகளையே குறிக்கிறது. வெளி 15: 2
உண்மையில், உலகத்தோற்றமுதல் தங்கள் தேவ பக்திக்காக இரத்தசாட்சிகளாக கொல்லப்பட்டவர்கள் பலிபீடத்திற்கு கீழே தங்கள் உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இரத்தசாட்சிகளுடைய எண்ணிக்கை நிறைவாகும்வரை பொறுத்திருக்கம்படியாக அவர்களுக்கு சொல்லப்பட்டது.

வச: 12 – 17 – ஆறாம் முத்திரை உடைத்தல்
மனுஷ குமாரனுடைய வெளிப்படை வருகைக்கு முன் வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுவதும், பூமியதிர்ச்சிகள் உண்டாவதுமான நிகழ்ச்சிகளில் உலகத்தில் பல நாசங்கள் நடந்தேறும். மல்கியா 4: 1,2. மத்தேயு 24: 29, 30. 1 தெச 1: 10

 Author: Rev. Dr. R. Samuel 


Author: Rev. Dr. R. Samuel