சங்கீதம் 48- விளக்கவுரை
முக்கியக் கருத்து - தேவனுடைய நகரத்தின் மேன்மையை விவரிக்கும் பாடல். வச.1 - இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை பெரியவராகக் கொண்டு அவர் வழியில் நடந்தபோது மிகுந்த சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்து தேவனை துதித்தார்கள். வழிவிலகி சென்றபோது மிகுந்த துன்பத்தை அனுபவித்தார்கள். வச.2, 3 - தாவீது, சாலமோன் இவர்கள் காலத்தில் சீயோன் நகரமும், எருசலேம் நகரமும் மகாராஜாவின் நகரமாகவும் தேவனுடைய ஆலயம் இருக்கும் இடமாகவும் இருந்தது. அது சீயோன் மலைக்கு வடதிசையில் இருந்தது. இந்த எருசலேம் நகரை நிரந்தரமான தேவனுடைய நகரமாக கர்த்தர் நித்தியத்திலே நிறைவேற்றுவார் என்று வெளி.21:1 இல் வாசிக்கிறோம். ஆகவே சீயோன் நகரம் உலக முழுவதற்கும் சந்தோஷத்தை கொடுக்கும் நகரமாக என்றைக்கும் இருக்கும். . இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் எருசலேம் நகரம் மகாராஜாவின் நகரமாயிற்று. அது உலகத்திற்கு சந்தோஷத்தைக் கொடுத்தது (மத்.5:35). . ஆவிக்குரிய சீயோன் என்னும் தேவனுடைய நகரமாகிய விசுவாசிகளாகிய நாம் உலகத்திற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறவர்களாக இருக்கிறோம் (மத்.5:14). நித்திய இராஜ்ஜியத்தில், பரலோகத்தில் புதிய எருசலேமை கர்த்தர் உருவாக்கி அங்கிருந்து அரசாளுவார். நித்திய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளுவார் (வெளி.21:1,2). பல்லவி கர்த்தர் பெரியவர் அவர் நமது சரணங்கள் 1. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி வச.4, 8 - தாவீதின் காலத்தில் இஸ்ரவேலரின் சத்துருக்கள் எருசலேம் நகரை மேற்கொள்ள முடியவில்லை. வச.14 - ஆகவே இந்த தேவன் சதாகாலமும் நம்மை நடத்தி தமது ராஜ்ஜியத்தில் மெய் விசுவாசிகளை சேர்த்துக்கொள்வார். Author: Rev. Dr. R. Samuel
- கோராகின் புத்திரருடைய பாடல்.
நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தரை பெரியவராக விசுவாசித்து நடந்து கொண்டால் சமாதானத்தால் நிறைந்து அவரை துதிப்போம்.
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்தப் பர்வதத்திலே - மிக
துதிக்கப்படத் தக்கவர்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம் - கர்த்தர்
ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவ விசுவாசிகளையும் நமது சத்துருவாகிய சாத்தான் மேற்கொள்ள முடியாது என்று இயேசு கிறிஸ்து பேதுருவினிடம் (மத்தேயு 16:18). ஆம் வசனத்தில் கூறி இருக்கிறார்.
கடைசி காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய பரலோக ராஜ்ஜியத்தை நிரந்தரமாக ஸ்தாபிக்கும்போது சத்துருக்கள் எதிர்த்து வந்தும் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்று வெளி.17:14 ஆம் வசனத்தில்,
"இவர்கள் (சத்துருக்கள்) ஆட்டுக்குட்டியானவருடனே (இயேசு கிறிஸ்துவுடன்) யுத்தம் பண்ணுவார்கள். ஆட்டுக்கட்டியானவர் கர்த்தாதி கர்த்தாவும், இராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெபிப்பார்'
என்று வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம்.
வச.9-13 - நாம் இந்த தேவனுடைய நகரம் என்று சொல்லப்படும் சீயோன் நகரமாகிய தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஒவ் வொரு அம்சத்தையும் உன்னிப்பாக கருத்தாக கவனித்து, அதை நம் பின்வரும் சந்ததிக்கு விவரித்து சொல்லவேண்டும். அவர்களும் தேவனை விசுவாசித்து, தேவ ராஜ்ஜியத்தின் புத்திரர்களாக வேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel