சிதேக்கியா என்ற மத்தனியா யோசியாவின் மகனும் யோயாக்கீனின் சிறிய தகப்பனும் ஆவான். அவன் யூதாவின் இருபதாவது மற்றும் கடைசி மன்னன். யோயாக்கீனின் ஆட்சிக் காலத்தில், நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி, ஆலயத்தைக் கொள்ளையடித்து, ராஜாவை நாடு கடத்தி, கிமு 597 இல் சிதேக்கியாவை அரசராக்கினான். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சிதேக்கியா பாபிலோனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
எரேமியாவின் அறிவுரை:
பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டனர், எரேமியா சிதேக்கியாவை சரணடையச் செய்யுமாறு அறிவுறுத்தினார், மேலும் நீ கொல்லப்படாமல் சமாதானமாக இறந்துவிடுவாய் என்று கர்த்தர் உறுதியளித்தார் (எரேமியா 34:1-7) என்றும் எரேமியா கூறினார். இராஜ்யத்தின் மீதான தேவனின் தண்டனை மீளமுடியாதது, சரணடைதல் மட்டுமே ஒரே வழி.
உடன்படிக்கை முறிக்கப்பட்டது:
சிதேக்கியா மக்களுடன் உடன்படிக்கை செய்து, ஆண், பெண் அடிமைகள் அனைவரையும் விடுவித்தான். இருப்பினும், அவர்கள் மீண்டும் அடிமைகளாக்கப்பட்டனர். “எனவே இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘ஜனங்களாகிய நீங்கள் எனக்கு அடிபணியவில்லை. நீங்கள் உங்கள் எபிரெய அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் விடுதலை கொடுப்பேன் என்ற உங்கள் உடன்படிக்கையைக் காக்கவில்லை, இது கர்த்தருடைய வார்த்தை. உங்களைக் கொல்வதற்காக வாள், பயங்கர நோய், பசி ஆகியவற்றுக்கு விடுதலை கொடுப்பேன். அவர்கள் உன்னைப்பற்றி கேள்விப்படும்போது, நான் உன்னைப் பூமியிலுள்ள இராஜ்யங்களிலேயே அஞ்சத்தக்க உதாரணமாகச் செய்வேன்” என எரேமியா மூலம் தேவன் கூறினார்.
தவறான தீர்க்கதரிசனம்:
அனனியா ஒரு கள்ளத் தீர்க்கதரிசி, அவன் பாபிலோனியர்களின் நுகம் முறிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான் (எரேமியா 28:1-17). ஒருவேளை, சிதேக்கியா பொய்யான தீர்க்கதரிசனத்தின் பக்கம் அதிகம் சாய்ந்திருக்கலாம், எரேமியா மூலம் வந்த தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
மரியாதை:
சிதேக்கியா எரேமியா மீது மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருந்தான், தனிப்பட்ட ஆலோசனையை எடுத்துக் கொண்டான். எரேமியாவின் எதிரிகள் தன்னைக் கொல்ல அவன் அனுமதிக்கவில்லை, ஆனால் அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதித்தான். எரேமியா இறக்கும்படி ஒரு குழியில் வீசப்பட்டார். சிதேக்கியாவின் அனுமதியுடன், எபெத்மெலெக்கால் அவர் காப்பாற்றப்பட்டார் (எரேமியா 38:7-12).
பொய்யான நம்பிக்கை:
பாபிலோனியர்களுக்கு எதிராக எகிப்து தனக்கு உதவும் என்று சிதேக்கியா நம்பினான், ஆனால் அது நடக்கவில்லை. மனந்திரும்பி தேவனைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, அவன் உலக சக்திகளை நம்பினான்.
தண்டிக்கப்பட்டது:
பாபிலோனியர்கள் எருசலேமைத் தாக்கியபோது, சிதேக்கியாவும் அவனது ஆட்களும் யோர்தான் நதியை நோக்கி ஓடிவிட்டனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நேபுகாத்நேச்சார் மிகவும் இரக்கமற்றவனாக இருந்ததால், அவன் சிதேக்கியாவின் குமாரர்களை அவனது கண்களுக்கு முன்பாகக் கொன்றான், பின்னர் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். இதனால், சிதேக்கியா தனது மகன்களின் கொடூரமான மரணக் காட்சியால் துன்புறுத்தப்பட்டான் (2 இராஜாக்கள் 25:1-7). ஆக சிதேக்கியா தன்னுடைய சிம்மாசனத்தையும், பிள்ளைகளையும், பார்வையையும், சுதந்திரத்தையும், தேசத்தையும் இழந்தான்.
தேசம் அழிந்தது:
கிமு 587 இல் பாபிலோனியர்கள் எருசலேமின் சுவர்களை உடைத்து, நகரத்தை எரித்து, ஆலயத்தையும் அழித்தார்கள்.
நான் கர்த்தரை மட்டும் மதித்து, ஆனால் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் உதாசீனப்படுத்துகிற நபரா? சிந்திப்போம்.
Rev. Dr. J.N. Manokaran