வீணான அலுவல்

பரபரப்பான உலகில் வீணான அலுவல் எனும் கலாச்சாரம் இடைவிடாத உழைப்பு மற்றும் நிலையான உற்பத்தித்திறனைப் போற்றுகிறது, மேலும் பாடுபடுவதற்கு எப்பொழுதும் நிறைய இருக்கிறது, அதிக பணம் சம்பாதிக்க வேண்டும், ஒரு பெரிய பாராட்டு காத்திருக்கிறது மற்றும் ஒரு உயர்ந்த உச்சவரம்பு உள்ளது என்ற தோற்றத்தை அளிக்கிறது.  எல்லாவற்றையும் உட்கொள்ளும் இந்த வேலை கலாச்சாரம் பெரும்பாலும் தனிப்பட்ட நல்வாழ்வு, மன அழுத்தம், சோர்வு, மன நோய் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றின் விலையில் செலவாகிறது.  சிலர் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்காக மற்றும் சமூகத்திற்காக அதிக மக்கள் பாடுபடுகிறார்கள் என்று வாதிடுகின்றனர்.  சிலர் வேலைதான் தங்களின் தெய்வம், அதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, குடும்பம் உட்பட எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.  சில இளைஞர்கள் ஒரு மோசமான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளனர்.  துரதிர்ஷ்டவசமாக, பலர் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், தூக்கமின்மை, சோர்வு, பதற்றம் தலைவலி, செரிமான பிரச்சினைகள் மற்றும் குறைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

பொருளாதார சுரண்டல்: 
ஆதியாகமம் 31:40 ல் “பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது” என யாக்கோபு தனது மாமா லாபானின் கீழ் தனது வேலையைப் பற்றி புலம்புகிறான்.  லாபான் யாக்கோபின் விடாமுயற்சியை அறிந்திருந்தான், மேலும் அவன் செல்வந்தனாகவும், அவனுடைய மகன்கள் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தவும் யாக்கோபின் வேலையில் அதிகச் சுமையை ஏற்றினான்.  பல முதலாளிகள் லாபனைப் போன்றவர்கள், அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் அவர்களுக்கு எவ்வளவு பணி சுமையை செலுத்த முடியுமோ அவ்வளவாய் செலுத்துகிறார்கள்.  ஆனால் தேவன் தான் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் எஜமானன்,  அவருக்கு தான் எல்லாருமே கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள், மற்றும் எல்லாரையும் அவர் ஒன்றுபோலவே நியாயந்தீர்க்கிறார் என்று பவுல் எச்சரிக்கிறார் (எபேசியர் 6:9).

பிழைப்பிற்கான சவால்: 
எகிப்தில் உள்ள பணி நிர்வாகிகள் வேலைக்கு தேவைப்படும் பொருட்களை வழங்க மறுத்துவிட்டனர், ஆனால் மூலப்பொருட்களை வைத்து என்ன வேலை செய்வார்களோ அதே வேலையை செய்யச் சொல்லி துன்புறுத்தினர் (யாத்திராகமம் 5:13). எகிப்தில் அடிமைகளாக இருந்த யாக்கோபின் சந்ததியினர் பிழைப்புக்காக அதாவது உயிர் வாழ வேண்டி உழைக்க வேண்டியிருந்தது. 

தன்னலப்படுத்துதல்: 
மற்றவர்கள் அடைய முடியாத இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமும், அவர்களின் ஆரோக்கியம், உறவுகள் மற்றும் எதிர்காலத்தையும் அழிப்பதன் மூலமும் கூட தங்களைத் தாங்களே மூழ்கடித்துக் கொள்கிறார்கள்.

தன்னார்வ தியாகம்:  
கர்த்தருக்காகவும், சுவிசேஷத்திற்காகவும், அவருடைய ராஜ்யத்திற்காகவும் தன் கஷ்டங்களை  பொருட்படுத்தாமல் ஒரு பைத்தியக்காரனைப் போல் பேசுவதாக பவுல் எழுதுகிறார்.   இது வெளிப்புற அச்சுறுத்தல்கள், விரோதமான சூழல் மற்றும் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.  அதில் பசி, தாகம், குளிர், தாக்குதல், உழைப்பு, கஷ்டம், தூக்கமின்மை மற்றும் சபைகளின் நலன் பற்றிய கவலை ஆகியவை அடங்கும் (2 கொரிந்தியர் 11:21-29).

தேவனின் முன்னேற்பாடு:  
ஓய்வு நாள் என்பது வாராந்திர ஓய்வு மற்றும் புதுப்பித்தலுடன் ஆரோக்கியமான சமநிலையான வாழ்க்கைக்கான தேவனின் திட்டமாகும்.  இந்த ஒழுக்கம் வீணான உழைப்பு மற்றும் ஆவிக்குரிய புதுப்பித்தலுக்கு ஒரு மருந்தாகும்.  இருப்பினும், தேவனுடைய ராஜ்யத்திற்காக, பவுலைப் போலவே, சிலர் பெரிய ஊழியம் செய்ய அழைக்கப்படுகிறார்கள். 

நான் பரபரப்பான உலகில் வீணான அலுவல் எனும் கலாச்சாரத்தை பின்பற்றுகிறேனா அல்லது வேதாகமம் கற்றுக் கொடுக்கும் கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran