நல்ல தலைவர்களுக்கு மதிப்புமிக்க கூட்டாளிகள் உள்ளனர், இதனால் அவர்கள் சிறந்தவர்களாக மாறுகிறார்கள். பிரபலமான அல்லது சிறந்து விளங்கும் ஊழியர்களுக்குக்கூட நல்ல கூட்டாளிகள், சக ஊழியர்கள், நண்பர்கள், ஜெபக் கூட்டாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர். பவுலுக்கும் தீமோத்தேயு, தீத்து, சைலஸ், லூக்கா என உட்பட பலரைக் கொண்டுள்ளார். தலைவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் கர்த்தர் அவர்களுக்கு தந்துள்ள சக ஊழியர்களை மதிக்க வேண்டும்.
பொது விசுவாசம்:
பவுல் தீத்துவை “நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான குமாரனைப் போன்றவன்” என்று குறிப்பிடுகிறார் (தீத்து 1:4). பவுல் தீத்துவை உண்மையான குமாரன் என்று பாராட்டுவதில் இருந்து கிறிஸ்துவில் உள்ள அனைவருக்கும் பொதுவான விசுவாசம் உள்ளது என்பதையும் இது குறிக்கிறது. விசுவாசம் பொதுவானது, அது பவுல், தீத்து மற்றும் அனைத்து விசுவாசிகளுக்கும் சமமாக சொந்தமானது.
திராட்சைத் தோட்டம்:
தேவனின் திராட்சைத் தோட்டத்தில், பவுல் தீத்துவை தனது சகோதரனாகக் கருதினார். பவுல் சென்ற இடத்தில் தீத்துவை காணாத போது பவுல் சிறிது அமைதியற்றுக் கூட காணப்பட்டார் (2 கொரிந்தியர் 2:13). அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தொடர்புடையவர்களாகக் காணப்பட்டனர்.
கண்ணோட்டம்:
மற்றவர்கள் தீத்துவை சரியான மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள் மற்றும் கருதுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த பவுல் விரும்பினார். எனவே, கொரிந்துவில் உள்ள விசுவாசிகளுக்கு தீத்துவை பவுலின் கூட்டாளியாகவும், சக ஊழியராகவும் அறிமுகப்படுத்தும்படி அவர் அறிவுறுத்தினார் (2 கொரிந்தியர் 8:23).
நம்பகமானவர்:
தீத்து ஒரு நேர்மையான நபர், அவரை முழுமையாக நம்பலாம். கொரிந்துவில் உள்ள விசுவாசிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட காணிக்கைகளைப் பெறும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது (2 கொரிந்தியர் 8:6). நிதி விஷயங்களில் கிறிஸ்தவர்கள் அவப்பெயருக்கு அல்லது பழிப்புக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆறுதல்:
பவுல் தனிமையாக உணர்ந்தார். ஆனால் தீத்து வந்தபோது, அவர் ஆறுதல் அடைந்தார் (2 கொரிந்தியர் 7:6). சிலர் வரும்போது எதிர்மறையான சூழ்நிலை, குழப்பம், அசௌகரியம், எரிச்சல் கூட இருக்கும். இருப்பினும், தீத்து போன்ற தெய்வீகத் தலைவர்கள் வரும்போது எப்போதும் ஆறுதல் இருக்கும்.
மேய்ப்பனின் இருதயம்:
தீத்து ஒரு மேய்ப்பன் இதயத்தைக் கொண்டிருந்தார். பவுலைப் போலவே அவர் மக்களை மிகுந்த கவனத்துடன் பராமரித்தார், ஆதரித்தார் (2 கொரிந்தியர் 8:16). ஒரு வேலைக்காரனின் மனப்பான்மை, ஒரு உக்கிராணக்காரனின் மனநிலை மற்றும் ஒரு மேய்ப்பனின் இருதயம் ஆகியவை ஒரு நல்ல தலைவரை உருவாக்குகின்றன, தீத்து அத்தகைய ஒரு தலைவராக இருந்தார்.
ஒரே மனப்பான்மை:
பவுலைப் போலவே, தீத்துவும் சபையை சுய இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விசுவாசிகளை பால் கறக்கும் பசுக்கள் போல் கருதி, முடிந்தவரை கரந்துவிட வேண்டும் என்று நினைக்கவில்லை. பவுலைப் போலவே தீத்துவும் தனக்கானதையும் கொடுத்து தன்னிடமிருந்த அனைத்தையும் செலவிடத் தயாராக இருந்தார் (2 கொரிந்தியர் 12:18). பெறுவதை விட கொடுப்பது அதிக பாக்கியம் என்பதை பவுலும் தீத்துவும் நன்கு அறிந்திருந்தனர் (அப்போஸ்தலர் 20:35).
விலையேறப்பெற்றக் கூட்டாளிகளை தேவன் கொடுத்த சொத்துக்களாக நான் கருதுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran