அதுல்லாம் குகையில் நடைபெற்ற பயிற்சி

பெலிஸ்தியர் நாட்டில் தன்னைப் பைத்தியமாக நடித்து தாவீது தப்பித்து வந்தார். அதுல்லாம் குகைக்குச் சென்றபோது, துன்பத்தில் இருந்தவர்கள், கடனில் சிக்கியவர்கள், மனக்கசப்பில் இருந்தவர்கள் எனப் பலர் தாவீதினிடத்தில் கூடினர் (1 சாமுவேல் 22:1–2). அப்படிப்பட்ட மக்களைத் தாவீது எப்படிச் செயல்படுத்த வேண்டும்?
கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது, அவர்களை நிராகரிக்கவில்லை; மாறாக, அவர்களை வடிவமைத்து, ஆத்துமீக ரீதியாக உயர்த்தி, ஒரு வல்லமைமிக்க படையாகப் பயிற்றுவித்தார். இந்த ஆவிக்குரியப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை
சங்கீதம் 34:11–22 சில முக்கியமான நுண்ணறிவு மூலம் வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள்: 
தாவீது அவர்கள் அனைவரையும் தனது குழந்தைகளாக ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு தந்தையைப் போல நேசித்தார், கவனித்துக்கொண்டார், பாதுகாத்தார், கற்பித்தார், பயிற்சி அளித்தார்.

தேவனுக்குப் பயம்:
ஒரு வீரனாக உருவாகவும், ஒரு படையாக வடிவமைக்கவும், தன் மக்களை தேவ பயத்தோடு பயிற்றுவித்தார் தாவீது.
தேவனைப் பற்றிய பயமே ஞானத்தின் தொடக்கம் என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார் (நீதிமொழிகள் 9:10).

ஜீவனை விரும்புதல்:
கார்த்தரைத் தேடி, தேவனை அறிந்து, தேவனுடைய பார்வையில் நேர்மையானதைச் செய்வதே கீழ்ப்படிதல் என்பதை தாவீது அவர்களுக்கு கற்றுத் தந்தார்.

வார்த்தைகள்:
தாவீதைப் பின்தொடர்பவர்கள் தீமையைப் பேசக்கூடாது; பொய் கூறவும் ஏமாற்றவும் உதடுகளைப் பயன்படுத்தக்கூடாது.

நன்மை மற்றும் சமாதானம்:
தீமையை விட்டு விலகி நன்மை செய்ய வேண்டும் என்று தாவீது அவர்களுக்கு கற்றுத் தந்தார். அவர்களைப் போர்வீரர்களாகப் பயிற்றுவித்தாலும், சமாதானத்தை நினைத்தும் அதைத் தொடர்ந்து தேடிக்கொள்ளவும் அவர் அவர்களுக்கு கற்பித்தார்.

கவனமான கண்கள்:
கர்த்தரின் கண்காணிப்பின் கீழ் வாழும்படி தாவீது அவர்களைப் பயிற்றுவித்தார்.
நீதிமான்களை கர்த்தரின் கண்கள் கவனித்து காக்கின்றன; அவர்களின் ஜெபங்களை அவர் செவிமடுக்கிறார்.
ஆனால் தீமை செய்பவர்களுக்கு எதிராகவே கர்த்தரின் முகம் இருப்பதாக அவர் கற்றுக் கொடுத்தார்.

மனவேதனை கொண்ட ஆவி மற்றும் உடைந்த இருதயம்:
கடனில் இருந்தோர், கஷ்டத்தில் இருந்தோர், அதிருப்தியில் இருந்தோர்  இவர்கள் அனைவரும் உடைந்த இருதயமும் மனவேதனையுடைய ஆவியுமுடையவர்களாக இருந்தார்கள். அவ்வாறானவர்கள் தேவனின் கிருபைக்கும் இரட்சிப்பிற்கும் உரியவர்களாக இருக்கிறார்கள்.

நீதிமான்கள் அனுபவிக்கும் துன்பம்:
நீதிக்காகத் துன்பங்களைச் சகித்துக்கொள்ள தன் மக்களைத் தாவீது தயாராக்கினார். அவர்களுக்குப் பல துன்பங்களும், அதே சமயம் விடுதலையும் இருக்குமென்று அவர் அறிந்திருந்தார். அவர் சொல்லிக்கொடுத்தது; அனைத்து கஷ்டங்களிலிருந்தும் கர்த்தர் அவர்களைத் தப்புவிக்கிறார்.

கர்த்தர் காக்கிறார்:
தேவன் தமது குமாரனை மிகுந்த கவனத்துடன் காக்கிறார். “ஒரு எலும்பும் உடைக்கப்படவில்லை” என்ற வேதவாக்கியத்தின்படி; கர்த்தருடைய எலும்புகள் எதுவும் உடைக்கப்படாதபடி அது நிறைவேறியது (யோவான் 19:36). அப்படி பாதுகாக்கும் தேவனவர். 

தீர்ப்பு:
தீமை, துன்மார்க்கரைத் தேடி அழிக்கும்; அதுபோல நீதிமான்களை வெறுப்பவர்களின் முடிவும் நாசமே ஆகும். ஆனால் கர்த்தரை நம்புகிறவர்களில் எவரும் தண்டனையடைய மாட்டார்கள், இதையே பவுலும் உறுதிப்படுத்துகிறார். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1). 

எனக்கு இந்த மாதிரியான பயிற்சி இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran