முட்களும் நெருக்கங்களும்

மனித வீழ்ச்சியின் காரணமாக, தேவன் பூமியை சபித்தார். பாவம் பல தேவையற்ற மற்றும் எரிச்சலூட்டும் அம்சங்களை உலகில் கொண்டு வந்தது. அவற்றுள் முட்செடிகளும் நெரிஞ்சல்களும் அடங்கும், விவசாயி மற்றும் தோட்டக்காரர்களுக்கு, முட்கள் மற்றும் நெரிஞ்சல்கள் தினசரி சவாலாக உள்ளன.  சீஷர்களின் வாழ்க்கையில் கூட, வெவ்வேறு இயல்புடைய முட்களும் நெரிஞ்சல்களும் இருக்கலாம்.   அன்னாளின் வாழ்க்கையிலும் பெனின்னாள் ஒரு முள்ளாக இருந்தாள்.    

உருவாக்கப்பட்ட சிக்கல்கள்: 
பெனின்னாள் எப்ராயீம் மலைநாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த எல்க்கானாவின் மனைவி.  அவருக்கு மற்றொரு மனைவி அன்னாள் (1 சாமுவேல் 1:1-2). சில யூத மரபுகள் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை இல்லாதபோது இரண்டாவது திருமணத்திற்கான விருப்பத்தை வழங்குகின்றன. பெனின்னாள் தனக்கு குழந்தைகள் இருப்பதில் பெருமிதம் கொண்டாள் மற்றும் அன்னாளை அனுதின வாழ்க்கையில் அவமானப்படுத்தினாள்.   குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதவள் என்று அன்னாளையும் கேலி செய்தாள்.  எனவே, அன்னாள் நேசிக்கப்படுவதற்கு தகுதியற்றவள் போலவும், வெறுப்பதற்கே தகுதியுள்ளவள் என்பது போலவும் பெனின்னாள் நடந்துக் கொண்டாள்.

அன்னாளிற்கான வாய்ப்புகள்: 
அன்னாளுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இல்லை. எவ்வளவு காலம்தான் அவமானத்தோடே, வெறுப்போடே, ஏளனங்களோடே வாழ்வது? அதற்கு தீர்வு தான் என்ன? முதல், அவள் பெனின்னாளுடன் சண்டையிட முடியும்.   ஆனால் அது அவளது குழந்தை இல்லாப் பிரச்சினையைத் தீர்க்காது.  இரண்டாவது , அவள் வீட்டை விட்டு ஓடிவிடலாம்.  ஆனால் கணவன் எல்கானாவோ அவளை மிகவும் நேசித்தான், ஆக அதைவிட்டு போக முடியவில்லை.  மூன்றாவது, தற்கொலை செய்து  கொள்வது.  நான்காவது , தேவனிடம் அடைக்கலம் அடைவதுதான் சிறந்த வழி. 

பெனின்னாள் தன்னையறியாமல் செய்த உதவி: 
பெனின்னாளின் குத்தலான பேச்சு ஏச்சுக்கள் அன்னாளின் ஆவிக்குரிய வாழ்க்கை உட்பட மொத்த வாழ்க்கையைமே மதிப்பீடு செய்ய உதவியது.  அவள் நான்குபடி செயல்முறையைக் கண்டுபிடித்தாள்.  முதலில், தன் அன்பான கணவன் உட்பட மனிதர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக தேவனைத் தேடுவது,  உதவி அல்லது ஒத்தாசை எங்கிருந்து வருகிறதோ அதை நோக்கிப் பார்ப்பது ஆகும் (சங்கீதம் 121:1). இரண்டாவது , சூழ்நிலை, பிரச்சனைகள், மக்கள், கண்ணீர், வலி ​​மற்றும் துன்பங்களை தேவனிடம் ஜெபத்தின் மூலம் தெரிவிக்க அல்லது சரணாகதி அடைந்திட வேண்டும். எதுவும் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் அன்னாள் தனது இருதயத்தை தேவனிடம் ஊற்றினாள்.  மூன்றாவது, அன்னாள் தேவனின் திட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது, மேலும் அவள் தேவனுக்கு விசுவாசத்துடன் தன்னை அர்ப்பணித்தாள், மகனைப் பரிசாக பெறுவாளே. நான்காவது, அன்னாள் வருத்தப்படவில்லை. 

அன்னாள் மீதான நோக்கம்:  
வாழ்க்கையின் முட்கள் அவளைத் துளைத்தபோது, ​​​​அன்னாள் தேவ சமூகத்திற்கு உந்தப்பட்டு ஒன்றைப் புரிந்துகொண்டாள், தேவன் அவளுக்கு ஒரு மகனைக் கொடுக்க மாத்திரமல்ல, ஒரு தீர்க்கதரிசியான சாமுவேலையே கொடுத்தார். 

முட்களான துன்பங்களுக்கு மத்தியில் நான் தேவனின் நோக்கத்தைத் தேடுகிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran