உலக ஆட்சியாளர்களின் சாத்தானிய உத்தி

வல்லமைமிக்க மற்றும் பொல்லாத அரசர்கள், சாத்தானின் தீய மற்றும் இழிவான பண்புகளைப் பிரதிபலிக்கிறார்கள். பார்வோன் சாத்தானைப் போன்றிருந்தான்; அவன் இஸ்ரவேலர்களை விடுவிக்க அனுமதிக்கவில்லை. இதற்கு மற்றொரு உதாரணம், அம்மோனியனான நாகாஸ் ஆவான் (1 சாமுவேல் 11:1-2).

ஆக்கிரமிப்பவன்:
நாகாஸ், கிலேயாத்திலிருக்கிற யாபேசைத் தாக்கி, நகரத்தைச் சுற்றி, சரணடையும்படி கேட்டான். அப்போது அந்த நகர மக்கள்,  “எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்”. அவர்கள் உயிர் பிழைக்க விரும்பினர்; கொள்ளையடிக்கப்படாமல், கொல்லப்படாமல் இருக்க நினைத்தார்கள். ஆனால் தேவனிடத்தில் தாழ்மையுடன் மனந்திரும்பாமல், அவர்கள் எதிரிகளுக்கே அடிமையாகத் தயார் ஆனார்கள். இதுபோலவே, பலர் சாத்தானுக்கு சுயமாக சரணடைகிறார்கள்.

நிபந்தனை:
நாகாஸ் வைத்த கொடிய நிபந்தனை என்னவென்றால், எல்லோருடைய வலது கண்ணையும் பிடுங்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் இஸ்ரவேலுக்கு அவமானம் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினான். இது அவர்களை பலவீனமாக்கி, போரில் எதிர்க்க முடியாதவர்களாக மாற்றும். பொதுவாக போரில் வீரன் இடது கையில் கவசத்தை பிடித்து, இடது கண்ணை மறைத்து, வலது கண்ணால் எதிரியை நோக்குவான். அந்த வலது கண்ணை இழந்தால், போராட முடியாது.

சாத்தானுடனான ஒற்றுமைகள்:
நாகாஸ் சாத்தானைப் போன்றவன். அவன் “பாம்பு” என்று அர்த்தம்.
முதலில், சாத்தான் மனிதரை தன்னிடம் சரணடையச் செய்ய முயல்கிறான். இரண்டாவது, மனிதர்களை அநியாயத்தின் கருவிகளாக மாற்ற விரும்புகிறான் (ரோமர் 6:13). மூன்றாவது, விசுவாசிகளை அவமானப்படுத்தி, தேவனுடைய ஜனங்கள்மீது பழி வரச் செய்கிறான். நான்காவது, சாத்தான், நம்மால் அவனுக்கு எதிராக போராட முடியாதபடி,
நம்முடைய ஆவிக்குரிய வலிமை, விசுவாசம் மற்றும் தெளிவான சிந்தனையை மெதுவாகக் குறைக்க முயல்கிறான். ஐந்தாவது, மனிதரை ஆவிக்குரிய குருடாக்க முயல்கிறான். முழுமையாக முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பகுதியளவில் குருடாக்க முயல்கிறான்.

சவுலின் பொறுப்பு:
சவுல் முழு ஜனங்களையும் ஒன்று சேர்த்து, நாகாஸைத் தாக்கி வெற்றி பெற்றான் (1 சாமுவேல் 11:11). அதுபோல, திருச்சபையும் ஒன்றுபட்டு சாத்தானையும், அவன் யோசனைகளையும் ஜெயிக்க வேண்டும்.

அவருடைய ஞானத்தையும் பெலத்தையும் கொண்டு, நான் சாத்தானை ஞானத்தோடு எதிர்க்கிறேனா?7

Rev. Dr. J.N. Manokaran