காத்திருந்த தந்தையின் உவமை

Hwa Yung அவர்கள் தமது “Leadership or Servanthood” என்ற நூலில், லூக்கா 15:11–32 உள்ள உவமைக்கு
“வழிகெட்ட மகனின் உவமை” என்பதற்குப் பதிலாக “காத்திருந்த தந்தையின் உவமை” என்ற தலைப்பே பொருத்தமானது என எழுதுகிறார்.

நாயகன் (Hero):
இந்த உவமையில் கெட்ட குமாரன் நாயகன் அல்ல. தவறு செய்த மகன் மையக் கதாபாத்திரமாக காட்டப்படுகிறான்; ஆனால் தந்தை அனுபவித்த வலி, அவமானம், மனவேதனை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.

பெரும் அவமானம் (Major Scandal):
தந்தை உயிருடன் இருக்கும்போதே சொத்தைப் பங்கிட்டுக் கொண்டு
ஒரு மகன் வீட்டை விட்டு செல்லுவது, ஆசிய குடும்பச் சூழலில் மிகப் பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது.
அது சட்டவிரோதமானது மட்டுமல்ல,
ஒழுக்கமற்றதும் ஆகும்.

பயனற்ற தந்தை எனும் பார்வை (Useless Father):
கிராமச் சமூகத்தினர் இந்தத் தந்தையை “பிள்ளைகளுக்கு நல்ல மதிப்புகளை கற்பிக்கத் தெரியாதவர், ஒழுக்கம் போதிக்காதவர்” எனக் கருதினர்.
பிரதான ஆசாரியரான ஏலியைப் போல, தன் சுயநினைவோடு நடந்த மகனை அவர் கட்டுப்படுத்தவோ கண்டிக்கவோ இல்லை (1 சாமுவேல் 3:13).

ஒரே வழி (Only Option):
தந்தைக்கு தன் மரியாதையையும் கௌரவத்தையும் காப்பாற்ற
ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது.
அதாவது, வழிதவறிய மகனை
பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மறுத்து, கிராம நீதிமன்றத்தில் அறிவிப்பது.

அன்பின் தேர்வு (Loving Choice):
ஆனால் தந்தை சட்ட வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்தார். மகன் திரும்பி வரும்வரை பொறுமையோடு காத்திருந்தார். இது பொதுவான அவமானமாகவும், அவரின் “திடமின்மை” குறித்து பரிகாசத்துக்கும் கேலிக்கும் காரணமாகவும் இருந்தது.

மனக்கசப்பு (Resentment):
இளைய மகனைத் தண்டனை இல்லாமல் அனுப்பி, மீண்டும் வர வாய்ப்பு கொடுத்த தந்தையின் முடிவு மூத்த மகனுக்கு ஏற்றதாக இல்லை. ஆரம்பத்தில் அவன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இளைய மகன் திரும்பி வந்தபோது,
அவனுடைய மனக்கசப்பு வெளிப்பட்டது. அவன் இளையவனை “என் சகோதரன்” என்று அழைக்காமல், “உம்முடைய மகன்” என்று சொன்னான். அவன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவில்லை.

பரலோகப் பிதா (Heavenly Father):
Hwa Yung அவர்கள் இந்த உவமையின் ஆவிக்குரிய பாடத்தைத் தெளிவாகச் சொல்கிறார்; “நம்முடைய பாவம் உண்டாக்கிய வேதனையை
அவர் சிலுவையின் மூலம் தாமே சுமந்தார்; அவமானத்தை தாமே ஏற்றுக்கொண்டார்; நாம் திரும்பி வர பொறுமையோடு காத்திருக்கிறார்;
அவர் அளிக்க விரும்பும் ஆசீர்வாதங்களுக்கு எந்த எல்லையும் வைக்கவில்லை”. தந்தை தன் வழிதவறிய மகனை
மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வரவேற்று, கொண்டாடி,
மீண்டும் வாழ்க்கையில் நிலைநிறுத்தியதுபோல்,
மனந்திரும்புவோருக்கு
தேவனாகிய பிதா
தம்முடைய ஆசீர்வாதங்களை
தாராளமாகப் பொழிகிறார்.

நான் பரலோகப் பிதாவின் அன்பை உணர்ந்து மதிக்கிறேனா? அதை போற்றி துதிக்கிறேனா

Rev. Dr. J.N. Manokaran