ஒரு ஏழை மனிதன் தன்னிடம் இருந்த அனைத்தையும் சேகரித்து, அந்த பிரசங்கியருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிந்தது. ஏனென்றால், தனக்கு ஆயிரம் கொடுத்தால், கடவுள் அவருக்கு பத்து மில்லியன் ரூபாய் தருவார் என்று பிரசங்கியார் வாக்குறுதி அளித்திருந்தார். ஒரு அதிசயம் நடக்கும் என அவரும் பொறுமையாகக் காத்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, அவரது மனைவி வேலையை இழந்தார். அவரது இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விரக்தியடைந்த அவர், ஜெபித்து விட்டு பிரசங்கியாரிடம் சென்று தனது பரிதாபகரமான சூழ்நிலையைப் பகிர்ந்து கொண்டார். பிரசங்கியார், அவரின் அறிக்கையிடாத பாவத்திற்காக தான் தேவன் அவரைத் தண்டித்து வருகிறார் அல்லது அவரது நம்பிக்கை ஆசீர்வாதங்களைப் பெற போதுமானதாக இல்லை என்பதாகவும் கூறினார். ஆறுதல் அடைவதற்குப் பதிலாக, அவர் குற்ற உணர்ச்சியையும், சோர்வையும் உணர்ந்தார், அது மாத்திரமல்ல தற்கொலை எண்ணத்திற்கும் ஆளானார்.
துக்ககரமான ஆறுதல் அளிப்பவர்கள்:
தேவனின் மனதைப் பேசாத துக்ககரமான ஆறுதல் அளிப்பவர்களை யோபு சமாளிக்க வேண்டியிருந்தது (யோபு 16:2). செழிப்புப் பிரசங்கியாளர்களைப் போலவே, யோபுவின் மூன்று நண்பர்களும் அவன் இரகசியமாக பாவம் செய்திருப்பான், அதற்கு தான் தேவன் தண்டித்து விட்டார் என்று பேசினார்கள் (யோபு 11:14-15; 22:4-7). துக்ககரமான ஆறுதல் அளிப்பவர்கள் தேவனைப் பற்றியோ, வீழ்ந்த உலகம், துன்பத்தின் அர்த்தம், தேவ கிருபை மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் அவரது திட்டம் என எதையுமே அறியாதவர்கள்.
எளிமையான கூற்றுகள்:
ஒருவர் இழப்பையோ, தோல்வியையோ, நோயையோ, விபத்து அல்லது பேரழிவையோ அனுபவித்தாலே; அந்த நபர் தேவனுக்கு எதிரான தீமை அல்லது பொல்லாத ஒன்றைச் செய்திருக்கிறார் என்பதாக சொல்லி விடுகிறார்கள். யோபு நல்லவனும், தெய்வீகமானவனும், தேவ பார்வையில் குற்றமற்றவனாகவும், தேவனுக்கு பயந்து தீய காரயங்களைச் செய்ய மறுப்பவனாகவும் இருந்தான், அதை சாத்தானால் அதை மறுக்க முடியவில்லை (யோபு 1:1).
துன்பம்:
செழிப்புப் பிரசங்கிகள் வலி மற்றும் துன்பத்திற்கு ஒவ்வாமை கொண்டவர்கள், அவர்கள் அவற்றை வெறுக்கிறார்கள். வீழ்ச்சியடைந்து சபிக்கப்பட்ட உலகில் கூட, நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்கும் துன்பம் ஏற்படுகிறது. இருப்பினும், தேவனால் அழைக்கப்பட்டவர்கள் அவருடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் துன்பப்பட வேண்டும் (பிலிப்பியர் 1:29). விசுவாசத்தின் சில வீரர்கள் வேதனையையும் பற்றாக்குறையையும் அனுபவித்தனர், அது கடைசி நாட்களிலும் அப்படியே இருக்கும் (எபிரெயர் 11:35-40).
தெய்வீக ஆலோசகர்கள்:
தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார் என்று அவர்கள் கற்பிக்கிறார்கள். அவர் ஒரு ஆள் சார்பற்ற கடவுள் அல்ல (சங்கீதம் 34:18). கிறிஸ்துவில் தேவனின் வாக்குறுதிகள் எல்லாம் ஆம் என்று இருக்கின்றன. எல்லா பிரச்சனைகளிலும், சோதனைகளிலும், இன்னல்களிலும் தேவனின் கிருபை போதுமானது. தன்னை நேசிப்பவர்களுக்கு இறுதி வெற்றியாக தேவன் எல்லா தீமைகளையும் துன்பங்களையும் தலைகீழாக மாற்றுகிறார் (ரோமர் 8:28).
நான் ஒரு துக்ககரமான ஆறுதலளிக்கும் நபரா?
Rev. Dr. J.N. Manokaran