டென்னிஸ் விளையாடுவதில் அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள். அவள் ஒரு தொழில்முறை நிபுணராக விரும்பினாலும், அவளால் முடியவில்லை. ஆனாலும், அவள் ஒவ்வொரு நாளும் டென்னிஸ் விளையாடினாள். அவளுடைய தோழிகளில் ஒருவள் அவளை வாராந்திர வேதாகம படிப்புக்கு அழைத்தாள். அவள் தனது டென்னிஸ் விளையாட்டுகளைத் தவறவிட விரும்பாததால், அவள் மறுத்துவிட்டாள். அவளுடைய தோழி அவளை தொடர்ந்து அழைத்தாள். ஒரு நாள், விளையாடும்போது அவள் விழுந்ததில் இரண்டு முழங்கால்களும் சேதமடைந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து தான் சுற்றி வர வேண்டியிருந்தது. இப்போது அவள் விரும்பிய விளையாட்டை விளையாட முடியவில்லை. அந்த நேரத்தில் அவள் வேதாகம படிப்புக்குச் செல்லலாம் என்று நினைத்தாள். அங்கு கலந்துக் கொண்ட பின்பு, அவள் கர்த்தரை அறிந்துகொண்டு அவருடைய சீஷரானாள். வேதாகமம் இவ்வாறு கூறுகிறது; “ தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார். அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்” (யோபு 5:18).
தேவன் அன்புள்ளவர்:
தேவன் சில நேரங்களில் சில வேதனையான விஷயங்களை அனுமதிக்கிறார், ஆனால் அது ஒரு பெரிய நோக்கத்திற்காக என்பதை நாம் நினைக்க வேண்டும். தேவன் இந்தப் பெண்ணை நேசித்தார், அவளுடைய வாழ்க்கையில் அவருடைய நோக்கத்தை அவள் அறிய வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஒரு தோழியைப் பயன்படுத்தி அவளை வேதாகம படிப்புக்கு அழைத்தார். ஆரம்பத்தில், அவள் கேட்கத் தயாராக இல்லை. அன்புள்ள தேவன் தன்னைத் தெரியப்படுத்த அவளை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. டென்னிஸ் வகுப்புகளுக்கு போகாமல் தடுக்க விபத்துதான் தேவன் பயன்படுத்திய முறை. தேவன் அவளுடைய வலி மற்றும் துன்பத்தால் பச்சாதாபப்பட்டார், ஆனாலும் அவர் அதை அனுமதிக்க வேண்டியிருந்தது.
சிறந்த வழி:
துன்பம், நோய், வலி மற்றும் தோல்விகள் ஆகியவை அழைப்பை மறுப்பவர்களின் கவனத்தைப் பெற தேவன் பயன்படுத்தக்கூடிய முறைகள். சி.எஸ். லூயிஸ் இப்படியாக கூறினார்; “தேவன் நம் இன்பங்களில் நம்மிடம் கிசுகிசுக்கிறார், நம் மனசாட்சியாக பேசுகிறார், ஆனால் நம் வேதனைகளில் அவர் உரக்க பேசுகிறார்: அது ஒரு காது கேளாத உலகத்தை எழுப்ப அவரது மெகாஃபோன் ஆகும்”.
தேவ கிருபை:
அவள் சக்கர நாற்காலியில் இருந்தாலும், அவளின் நண்பர் அவளை வேதாகம படிப்புக்கு அழைத்துச் செல்ல அங்கு இருந்தார். தேவன் தனது அன்பையும் கிருபையையும் வெளிப்படுத்தினார், எப்படியென்றால் சக்கர நாற்காலியில் இருக்கும் தன் தோழியை இயல்பாக மாற்ற அவளுடைய நேரம், சக்தி மற்றும் சுகபோகங்களை தியாகம் செய்து அவளுடன் வேதாகம படிப்புக்கு அழைத்துச் சென்றார்.
தேவ வார்த்தை:
விசுவாசம் என்பது வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. அவள் வேதாகமத்தைப் படிக்கவும், கலந்துரையாடலில் பங்கேற்கவும், செய்திகளைக் கேட்கவும் தொடங்கியபோது, அவள் இருதயத்தில் ஒளி பிரகாசித்தது. தேவன் அவளுடைய காயங்களைக் கட்டி, அவளைத் தம்முடைய ராஜ்யத்திற்குள் அரவணைத்தார்.
எல்லா கடினமான சூழ்நிலைகளிலும் நான் அவருடைய அன்பை நம்புகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran