திருக்கப்பட்ட நபர்கள்

ஒரு பெண் குழ்ந்தைக்கு விளையாடுவதற்காக பொம்மை சமையல் பாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் பல சாமாங்கள் இருந்தன. சில இறுக்கமான மூடிகளுடன் கூடிய பாத்திரங்கள் மற்றும் கிண்ணங்கள் போன்றவை. ஒரு நாள் அவள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மூடி கழன்று உருண்டு சென்றது, அவளுடைய அம்மா தெரியாமல் அதை மிதித்துவிட அது வளைந்துவிட்டது, அந்தப் பெண் குழந்தை அழ ஆரம்பித்து விட்டாள். அவளுடைய அம்மா அதை மீண்டும் வடிவத்திற்குக் கொண்டுவர முயன்றாள், ஆனால் முடியவில்லை. அவளுடைய தந்தை சுத்தியல் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி முயன்றார், ஆனால் முடியவில்லை. பின்னர் அதை ஒரு பழுதுபார்க்கும் கடைக்கு எடுத்துச் சென்று, சூடாக்கி, மூடியாகப் பொருந்தும்படி வடிவமைக்க வேண்டியிருந்தது.

அறநெறிகள் திருக்கப்பட்டிருப்பவர்கள்: 
சிலரது அறநெறிகள்  திருக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் நல்லதை தீமை என்றும், தீமையை நல்லது என்றும் அழைக்கிறார்கள். சிலருக்கு, நல்லது கெட்டது என்று வேறுபாடு இல்லை. எனவே, அவர்களின் செயல்கள் கண்மூடித்தனமானவை, மிருகத்தனமானவை, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

உணர்வு ரீதியாக திருக்கப்பட்டிருப்பவர்கள்: 
எதற்கும் யாரையும் காயப்படுத்தலாம், அது தேசிய செய்தியாக மாறும். பலர் உணர்வுகளை அழிப்பவர்கள் அவர்கள் ஆரோக்கியமான உறவுகள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டிருப்பதில்லை. மக்கள் அதிக சுயநலவாதிகளாகவும், தொட்டல் சினுங்கி போலவும் இருக்கும்போது, மற்றவர்களின் இயல்பான நடத்தையால் அவர்கள் மிகவும் புண்படுத்தப்படுகிறார்கள்.

திருக்கப்பட்ட வார்த்தைகள்:  
வேதாகமம் விபரீதமான மற்றும் வஞ்சக வார்த்தைகளுக்கு எதிராக எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 4:24) கிறிஸ்தவரின் ஆவிக்குறிய நிலை அவர்கள் தங்கள் நாவை  கட்டுப்படுத்துவதை கொண்டு அளவிடப்படுகிறது. (யாக்கோபு 3:1-10) மனதைக் கட்டுப்படுத்துபவர் நாவையும் கட்டுப்படுத்துவார்.

திருக்கப்பட்ட வழிகள்: 
சிலர் திருக்கப்பட்ட அல்லது கோணலான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் நேரான பாதைகளில் செல்ல விரும்புவதில்லை. மாற்று, புதுமை மற்றும் அனுபவம் மரணத்தின் பக்கவாட்டுப் பாதைகளைத்  தீர்மானிக்கிறது. இந்த திருக்கப்பட்ட பாதைகள் ஜீவனின் வழிகள் அல்ல, மரணத்தின் வழிகள்.

சமூக ரீதியாக திருக்கப்பட்டவர்கள்: 
மிகைப்படுத்தப்பட்ட உலகில், பல இளைஞர்கள் சமூக ஊடகங்களில் மற்றவர்களின் கருத்துக்களால் திருக்கப்படுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, டிஜிட்டல் காட்சிக்கூடத்தின் முன் வாழ்க்கை ஒரு விளையாட்டாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ மாறுகிறது. சமூக வலைதளங்களில் வரும் விருப்ப பொத்தாங்கள், கைதட்டல் சமிக்கை பொத்தான்கள் போன்றவை ஒரு நபரின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன. மேலும், பலர் உண்மையான உலகத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

மறுசீரமைப்பு: 
வெப்பம் மற்றும் உயர் அழுத்த செயல்முறையின் மூலம் அந்த மூடி சரி செய்ய வேண்டியது இருந்தது போல, பரீட்சைகள், சோதனைகள், பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் போன்றவற்றின் மூலம் ஒரு நபரை மீட்டெடுக்க கர்த்தர் தமது ஆவியையும், அவருடைய வார்த்தையையும் பயன்படுத்துகிறார். பெரும்பாலான நேரங்களில், வியாதி, தோல்விகள், துன்பங்கள், இழப்பு, நிராகரிப்பு... போன்றவை கர்த்தரின் மறுசீரமைப்புக்கான கருவிகளாகும்.

நான் எனது திருக்குகள் மற்றும் கோணல்களிலிருந்து மறுசீரமைக்கப்பட்டிருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran