ஞானம் நிராகரிக்கப்படல்

மனிதகுலத்தின் வரலாற்றிலேயே தேவனுடைய ஞானம் மறுக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளது. வேதம், தேவனுடைய வார்த்தையை மறுக்கும் மூன்று வகையான மக்களைப் பற்றி சொல்கிறது (நீதிமொழிகள் 1:22-25). ஞானம் அழைக்கிறது, அழைப்பை வழங்குகிறது, மனதுடன் கேட்டு ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு புரிதல், அறிவு, புத்திக்கூர்மை ஆகியவற்றை கிருபையாய் அளிக்கிறது. ஒருவன் புத்திசாலியாக ஆகும்படி, தமது ஆவியையும் வார்த்தைகளையும் தேவன் ஊற்றித் தருவேன் என்று வாக்களித்துள்ளார்.

எளிமையானவன் (Simple):
ஞானத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளாத மனம் கொண்டவர்களே இவர்கள். எவ்வளவு நாள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என எளியவர்கள் தேவவார்த்தையை மறுத்தும், புறக்கணித்தும் இருப்பார்கள்? எளிமையானவர்கள் தங்கள் எளிமையையே நேசிக்கிறார்கள்; அறிவை வெறுக்கிறார்கள்.

நையாண்டிகாரன் (Scoffer):
நையாண்டிகாரர்கள், கேலிக்காரர்கள் தாமே எல்லாம் அறிந்தவர்கள் என எண்ணுபவர்கள் (நீதிமொழிகள் 21:24). முக்கியமான விஷயங்களை அவர்கள் சிறிதும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்; அவற்றைப் பார்த்து சிரிக்கின்றார்கள். வாரன் வீர்ஸ்பி எழுதுகிறார்; “எளியவனின் முகத்தில் வெற்று பார்வை இருக்கும்; ஆனால் கேலிக்காரரின் முகத்தில் நையாண்டி சிரிப்பு இருக்கும்.”

முட்டாள் (Stupid):
முட்டாள்கள், அறிவில்லாதவர்கள் எனப்படுபவர்கள் மந்தமனமும் பிடிவாத மனமும் கொண்டவர்கள். இது குறைந்த அறிவாற்றல் அல்லது கல்வியின்மை பற்றி அல்ல; ஆவிக்குரிய விஷயங்களுக்கு விருப்பமின்மையே காரணம்.

கீழ்நிலைப் பயணம் (Downward journey):
ஒருவன் முதலில் எளியவனாகத் தொடங்குகிறான், பின்னர் முட்டாளாகி, கடைசியில் நையாண்டிகாரனாகிறான்.

மறுப்பு (Rejection):
இவர்களின் ஆவிக்குரிய இருட்டான நிலை அவர்கள் எடுத்த முடிவினாலே ஆகும். ஞானத்தைத் தழுவுவதே நல்ல மாற்றத்தின் தொடக்கம். ஆனால் அவர்கள் அக்கறை காட்டவில்லை. முதலாவது, அவர்கள் தேவவார்த்தையையும் ஞானத்தையும் கேட்க மறுத்தார்கள். கீழ்ப்படியாமையும் கலகமும் தேவனுடைய வார்த்தையை மறுக்க வைக்கிறது. இரண்டாவது, அவர்கள் கண்டிப்பை அலட்சியப்படுத்தினர். எச்சரிக்கைக்குப் பின்பும் பெருமை ஒருவரை பிடிவாதமாக வைத்திருக்கிறது. மூன்றாவது, அவர்கள் தேவனுடைய நீட்டப்பட்ட கரத்தை மறுத்தார்கள். அது தேவனுடைய அன்பு, மகிமை, வல்லமையின் வெளிப்பாடு; அதைப் பயனற்றதாக எண்ணினர். நான்காவது, அழிவின் பாதையில் செல்பவர்களை தேவன் மனந்திரும்பச் சொல்லியும், திரும்பிவா என்று அறிவுரைத்தும், அந்த அறிவுரையை புறக்கணித்தனர்; அதனால் தேவனையே புறக்கணித்தார்கள்.

அழிவும் விபத்தும் (Destruction and calamity):
ஞானத்தை மறுத்தால், அதன் விளைவு அழிவே. அது புயலாய், சுழல்காற்றாய் வரும் (நீதிமொழிகள் 1:26-27). அந்தக் காலத்திலேயே அவர்கள் கத்தினாலும், மனந்திரும்பினாலும், தேவன் கேட்க செவிமடுக்க மாட்டார்.

நான் அவர் சத்தத்தைக் கேட்டு, வேதத்தைத் தியானித்து, ஞானமுள்ள நபராக இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran