ஒரு 16 விநாடிகளுக்கான வீடியோ ஒன்றில் உத்தரகாசியில் உள்ள கங்கை ஆற்றின் துணையாறு பாகீரதி ஆற்றில் ஒரு பெண் நுழைவதைக் காட்டுகிறது. அந்த பெண், தன் 11 வயது மகளிடம் கைபேசியில் வீடியோ பதிவு செய்யச் சொல்லியிருந்தார். அந்தபெண் திடீரென்று வழுக்கி விழ, மகள் “மம்மி!” என்று கத்துகிறாள். ஆற்றிலிருந்து வெளியே வர பெண் போராடுகிறாள், ஆனால் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறார் (NDTV, ஏப்ரல் 16, 2025).
போக்குகள் (Trends):
பண்டைய காலத்து அத்தேனே குடிமக்கள் போல், இப்போது உலகமெங்கிலும் உள்ளவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகியுள்ளனர். “அங்கு வசித்த அத்தேனே பட்டணத்தாரும் அந்நாட்டு வெளிநாட்டாரும், எப்பொழுதும் ஏதாவது புதியதைச் சொல்லவோ கேட்கவோ தவிர வேறு எதிலும் பொழுது போக்குவது இல்லை” (அப்போஸ்தலர்:17:21). அப்போது பேசுவதும் கேட்பதும் இருந்தது; இன்று புதியதை ஒளிபரப்புவதும் (ரீல்ஸ்கள், ஷார்ட்ஸ்கள்) பார்ப்பதும் புதிய போக்காகியுள்ளது. அத்தகைய வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன.
பிரபலம் (Popularity):
துரதிஷ்டவசமாக, பலர் தங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். அவர்களுக்கான வாழ்க்கையின் நோக்கம் பிரபலமாவது மட்டுமே. எனவே, அவர்கள் புதிது புதிதாக சிந்திக்கின்றனர், புதிய இடங்களுக்கு சென்று வீடியோக்கள் எடுக்கின்றனர். ஆனால் அந்த யோசனைகள் கல்வி மேம்பாட்டிற்காகவோ அல்லது ஆவிக்குரிய வளர்ச்சிக்கோ அல்ல; வேடிக்கை, உணர்வுபூர்வம் மற்றும் ஆதாரமற்றவை. பார்ப்பவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதைப் போலவே நடிகர்களும் இருப்பார்கள். அத்தகைய பயனற்ற வீடியோக்களை மக்கள் விரும்புவதால், சிலர் அந்த வகை வீடியோக்களை தயாரித்து பார்வையாளர்களின் விருப்பங்களை திருப்திப்படுத்துகிறார்கள்.
வாழ்க்கை இழக்கும் அபாயம் (Risk of life):
பல ஏழை மக்கள், எதையாவது சாப்பிடுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைக் காணலாம்; உதாரணமாக, எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டது போல (புலம்பல் 5:9). ஆனால் வெறும் சில விநாடிகள் புகழ்பெற, உயிரைப் பணயம் வைக்கும் செயல்களில் ஈடுபடுவது என்பது ஒன்றும் மதிப்புள்ளதாக அல்ல. அதிலும் கொடுமை என்னவென்றால்,
தான் எவ்வளவு பிரபலம் ஆனோம் என்பதைப் பார்க்க அந்த நபர் வாழ்ந்திருந்து பார்க்க முடியாத நிலைமை. அதுவே ஒரு பெரிய சோகம்.
நிஜம் (Reality):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்; “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத்தேயு 16 : 26). சமூக ஊடகங்களின் மூலம் ஒருவர் உலகமெங்கும் உள்ள மக்களின் பாராட்டைப் பெறலாம். ஆனால், ஆத்துமாவை இரண்டாவது மரணத்தில் இழந்துவிட்டால், அதில் என்ன பயன்?
வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் பரிசுத்தரும், நீதியுள்ளவரும், உண்மையானவருமான தேவனை அறிந்து, அவருடன் ஒப்புரவு செய்துகொள்வதே ஆகும்.
வாழ்க்கையின் உண்மையான அர்த்தமும் நோக்கமும் நான் அறிந்து நடக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran