பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் தனது பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றான். காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டபோது, முதல்வர் அடிக்கடி மற்ற மாணவர்களை கடுமையாக திட்டுவதாகவும், கண்டிப்பதாகவும், எச்சரித்ததாகவும் அவன் கூறினான். இதனால் கோபமடைந்த அவன் அவரைக் கொல்ல முடிவு செய்தான். அதிர்ச்சியூட்டும் விதமாக, அச்சிறுவன் எந்த வருத்தமோ அல்லது சோகமோ தெரிவிக்கவில்லை என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார் (தி ட்ரிப்யூன், டிசம்பர் 7, 2024)
கோபம்:
எல்லா மனிதர்களும் பாவிகள். ஆனாலும், பாவத்தில் ஈடுபடும்போது, அவர்கள் தங்களைத் தவிர மற்ற அனைவரின் மீதும் கோபப்படுகிறார்கள். காயீன் தனது பலியை நிராகரித்ததற்காக தேவன் மீது கோபமடைந்தான், சிறந்த ஒன்றை வழங்கியதற்காக ஆபேலைப் பார்த்து பொறாமைப்பட்டான், ஒருவேளை தன் பெற்றோரிடம் கூட கசப்பு இருந்திருக்கும் (ஆதியாகமம் 4).
அதிகாரத்திற்கு ஒவ்வாமை:
இன்று பல இளைஞர்கள் அதிகாரத்தை எதிர்க்கின்றனர். கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திரத்தை அவர்கள் விரும்புகிறார்கள், விதிகளை அமல்படுத்துபவர்களையோ அல்லது ஒழுக்க தரங்களை நிலைநிறுத்துபவர்களையோ தடைகளாகக் கருதுகிறார்கள்; பெரும்பாலும் அவர்களை "மகிழ்ச்சியைக் கொல்பவர்கள்" என்று முத்திரை குத்துகிறார்கள்.
செல்வம்:
துரதிர்ஷ்டவசமாக, சில பணக்கார பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் ஒழுக்க விழுமியங்களை வளர்க்கத் தவறிவிடுகிறார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் செல்வத்தை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள்; உரிமங்கள் இல்லாமல் சொகுசு கார்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறார்கள்.
வன்முறை கலாச்சாரம்:
இளைஞர்களிடையே வளர்ந்து வரும் வன்முறை கலாச்சாரம் பகுத்தறிவு, கலந்துரையாடல்கள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் எதையும் ஏற்பதில்லை. திருத்தம் செய்தால் ஏற்றுக் கொள்வதற்கான சகிப்புத்தன்மை குறைவாகவே உள்ளது. கேட்பதற்குப் பதிலாக, ஆலோசனை வழங்குபவர்களையும், அறிவுறுத்துவோரையும் அல்லது கட்டளையிடுபவர்களையும் மெளனமாக்க விரும்புகிறார்கள். இந்த சிறுவனுக்கு, அவனை ஒழுங்குபடுத்திய முதல்வர் நீக்கப்பட வேண்டிய தொந்தரவாக மாறினார்.
துப்பாக்கிகளை வாங்குதல்:
ஆயுதங்கள் எளிதில் கிடைக்கின்றன. இளம் வயதினரும் கூட சட்ட விளைவுகள் இல்லாமல் துப்பாக்கிகளை வாங்க முடியும். அதிகரித்து வரும் வன்முறையால் பாதிப்புள்ளாகும் ஒரு சமூகத்தில், கொடிய கருவிகள் பரவலாகி, மனங்கள் குளிர்ச்சியடைகின்றன.
கடின இருதயம்:
ஒரு பிடிவாதமும் கெட்டுணர்வும் கொண்ட மனத்துடன், அந்தப் சிறுவன் எந்தத் தயக்கமுமின்றி, குற்ற உணர்வுமின்றி, வருத்தமுமின்றி துப்பாக்கியால் சுட்டான். தொடர்ந்து மீறுபவர்களுடன் அல்லது கலகம் செய்பவர்களுடன் தேவஆவி நிலைநிற்காது (ஆதியாகமம் 6:3).
நான் பரிசுத்த ஆவியின் நற்சான்றுக்கு உணர்வுப்பூர்வமாக பதிலளிக்கிறேனா, அல்லது என் மனதை கடினப்படுத்திக்கொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran