நகோமி - உறுதியான நம்பிக்கையுடையவள்

நகோமி கிமு 1370 மற்றும் 1031 க்கு இடையில் வாழ்ந்தார், பெரும்பாலும் யாவீர் (கிமு 1126 மற்றும் 1105) நியாயாதிபதியாக இருந்தபோது. நகோமி மற்றும் எலிமெலேக் அவர்களின் இரண்டு மகன்களுடன் (மக்லோன் மற்றும் கிலியோன்) இஸ்ரவேலில் வறட்சி மற்றும் பஞ்சத்திற்கு பயந்து பெத்லகேமிலிருந்து மோவாபிற்கு குடிபெயர முடிவு செய்தனர் (ரூத் 1:1-3). இது சுமார் 30 மைல் பயணம். விளைவு பேரழிவு தரும்.  எலிமெலேக்கும் அவரது இரண்டு மகன்களும் இறந்தனர். நகோமி, ஓர்பா மற்றும் ரூத் மூன்று விதவைகள் கொண்ட குழுவாக மாறினர்.  வருமானம், சொத்து, அடையாளம் மற்றும் நம்பிக்கை இல்லாமல், நகோமி இஸ்ரவேலுக்கு செல்ல முடிவு செய்கிறார். 

நகோமியின் வாழ்க்கையின் ஐந்து கட்டங்கள்

1. வறட்சியும் சந்தேகமும்
குடியேறும் முடிவில் நகோமி ஒரு தீவிர செயல்பாடு கொண்டிருந்தாள்.  

2. முன்னேற்றமும் படுகுழியும்
மகன்களான மக்லோனும் கிலியோனும் தங்கள் வாழ்க்கைத்துணையை திருமணம் செய்து கொண்டபோது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் கொஞ்சம் காலங்களில் நகோமி தனது கணவரையும் இரண்டு மகன்களையும் அடக்கம் செய்ய வேண்டியிருந்தது. அந்நிய நாட்டில் இருந்த விதவை முழுமையான இருளும் நம்பிக்கையின்மையும் நிரம்பியவளாக காணப்பட்டாள்.

3. விசுவாசமும் நம்பிக்கையும்
தேவன் தம் மக்களைச் சந்தித்ததாகவும், மழை பெய்ததாகவும் கேள்விப்பட்டபோது, ​​அவள் இஸ்ரவேலுக்குச் செல்ல முடிவு செய்தாள் (ரூத் 1:6-9). தன் மருமகள் மீதான அவளுடைய அணுகுமுறை முன்மாதிரியானது. முதலாவதாக, அவள் அவர்களை கண்ணியத்துடன் நடத்தினாள்; இரண்டாவது அவர்களின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தாள்; ஆம், தெரிவு செய்யும் சுதந்திரம்; மூன்றாவது, அவர்களுக்கான நன்மையான காரியங்களை ஒப்புக்கொண்டாள்; நான்காவதாக அவர்களுக்கு ஒரு புதிய திருமணம் மற்றும் குடும்பத்தை விரும்பினாள். அவள் ரூத்தை ஏற்றுக்கொண்டு அவளை அழைத்துச் சென்றாள்.

4. மீட்பும் மீண்டும் நிலைநாட்டுதலும்
நகோமி தன்னை மாரா என்று அழைக்க விரும்பினாள்; அதன் அர்த்தம் கசப்பு மற்றும் வெறுமை ஆகும் (ரூத் 1:20,21). நகோமி ரூத்தை வேலைக்குச் செல்ல ஊக்குவித்தாள் (ரூத் 2). இது ரூத்தை போவாசுடன் சந்திக்க வழிவகுக்கிறது. தேவனின் திட்டத்தை உணர்ந்த நகோமி, ரூத்தை மீட்கக் கூடிய உறவினராகிய போவாசுக்கு திருமணம் செய்து வைக்க தனது சட்ட உரிமைகளை செயல்படுத்தினார். அதேசமயம், அவர் ரூத்தை ஊக்குவித்தும் இருந்தாள்.

5. மகத்துவமும் வம்சாவளியும்
நகோமியின் வாழ்க்கையில் தேவனின் தலையீடு விசுவாசம், நம்பிக்கை, பரிபூரணம் மற்றும் பலனளிப்பு என்பதாகும். தேவன் நகோமியின் விசுவாசத்தை மதித்து ஆசீர்வதித்தார். ரூத் மற்றும் போவாசுக்கு திருமணம் ஆனது, அவர் ஒரு நீதிமான், தாராளமானவர், இரக்கமுள்ளவர், மற்றும் தேவபக்தியுள்ளவர் ஆவார். ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்த மகன் நகோமியின் மகனாகக் கருதப்பட்டான்.  ரூத்தின் பெயர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் காணப்படுகிறது (மத்தேயு 1:5). எனவே, நகோமி கிறிஸ்துவின் வம்சாவளியில் ஒரு தத்தெடுத்த பாட்டியாக விளங்கினாள். 

 நகோமியைப் போல எனக்கும் உறுதியான நம்பிக்கை இருக்கிறதா? 
 

Rev. Dr. J.N. Manokaran