குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்களைப் குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களை எச்சரித்தார். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவரும் ஒரு குழியில் விழுவார்கள் (மத்தேயு 15:14). எனினும், மனிதர்கள் அந்தத் தவறாக வழிநடத்தும் தலைவர்களை நேசிக்கவும், கேட்கவும், உண்மையாக வாழவும் முனைகிறார்கள். "எனவே, உங்கள் தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல மந்திரத்தைப் பயன்படுத்தும் ஆட்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். தங்கள் கனவுகளுக்கு விளக்கங்கள் கூறுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். மரித்தவர்களோடும் மந்திரம் பயிற்சி செய்வோர்களோடும் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள் (எரேமியா 27:9). சுவாரஸ்யமாக, ஐந்து வகையான குருட்டுத் தலைவர்களை குறித்து எரேமியா பட்டியலிட்டுள்ளார்.
கள்ளத் தீர்க்கதரிசிகள்:
இவர்கள் உண்மையான தீர்க்கதரிசிகளைப் போல் நடிக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகள். இந்த பாசாங்கு செய்பவர்கள் உண்மையான தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுபவார்கள். ஆனால் பரிசுத்தமான, உண்மையுள்ள, கீழ்ப்படிதலுள்ள, பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு செவிசாய்க்கும் தீர்க்கதரிசிகளை தேவன் பயன்படுத்துகிறார். கள்ளத் தீர்க்கதரிசிகள் இந்த ஆவிக்குரிய காரியங்கள் எதையும் விரும்புவதில்லை, மேலும் இதுவே தேவ செய்தி என்பதாக கூறி அவற்றை தேவனின் செய்தியாகவே வழங்குகிறார்கள். அவர்கள் தேவனையும், அவருடைய வார்த்தையையும் நன்கு அறிந்திருக்கிறார்கள், உண்மையான தீர்க்கதரிசிகளைப் பற்றி கூட அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பாசாங்கு செய்பவர்கள் மற்றும் போலித்தனமாக இருக்கிறார்கள்.
குறிசொல்பவர்கள்:
சமூகத்தில் இவர்களும் தலைவர்களாக நடிக்கிறார்கள். நண்பர்கள் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ தங்கள் திறமையைப் பற்றிய செய்தியைப் பரப்புவதன் மூலம், அவர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். மக்கள் வழிகாட்டுதலுக்காகச் செல்லும்போது, அவர்கள் விரிவான சடங்குகளைச் செய்கிறார்கள் மற்றும் சில பொருட்களைப் புனிதமாக அறிவிக்கிறார்கள், மேலும் அந்த பொருள் கடவுள் தொடர்புகொள்வதற்கான ஊடகமாக மாறுகிறது. அந்த பொருள் ஒரு எலுமிச்சை, ஒரு பூ, ஒரு புத்தகம் (அது பைபிளாக கூட) அல்லது ஏதாவது இருக்கலாம்.
சொப்பனக்காரர்:
பிறர் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றைப் பார்ப்பதாகக் கூறி மயக்க நிலைக்குச் செல்லும் மர்மவாதிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் கனவில் சொர்க்கத்திற்குச் செல்வதாகவும், கடவுளோடு நேரடியான தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரோடு உணவருந்த நேரம் இருந்ததாகவும் கூறுகின்றனர். படைப்பாற்றல் மிக்க கற்பனைத் திறன் கொண்டவர்களாக இருப்பதால், கனவுகளை நிஜம் போல சொல்ல முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக, பலர் அவர்கள் சொல்லும் கனவுகளை உண்மை என நினைத்து அதில் விழுந்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஜோதிடர்கள்:
இவர்கள் சில கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அதாவது ஒருவரின் பிறப்பின் போது நட்சத்திரங்களின் நிலை, எண்கணிதம், கிளி ஜோசியம், தாயம் பயன்படுத்துவது, மற்றும் கைரேகை என எல்லாம் ஜாதகத்தில் அடங்கும். இவர்களின் கூற்றுப்படி, ஒரு நபரின் விதியின் மர்மங்கள் இவற்றில் மறைந்துள்ளன எனவும், மேலும் அவற்றில் குறைகள் இருந்தால் நீக்கம் செய்யும் சிறப்பு சக்தி அவர்களுக்கு உள்ளது போலவும் நினைக்கிறார்கள்.
மந்திரவாதிகள்:
அவர்கள் சில கடுமையான சடங்குகள் மூலம் மந்திரம் மற்றும் தாந்த்ரீக சக்திகள் என, பெரும்பாலும் மண்டை ஓடுகள் உட்பட மனித எலும்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
நான் (ஆவிக்குரிய) குருடர்களைப் பின்பற்றுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran