உத்தமத்தை இழந்துவிடக்கூடாது

நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி.. எபிரெயர் 12:12

உங்கள்  நெகிழ்ந்த கைளை நிமிர்த்துங்கள் என்று ஆண்டவர் உங்களை பார்த்து சொல்லுகிறார்..வெள்ளத்தினூடே சென்றுக்கொண்டிருக்கலாம்..நீர் பிளந்து வழி விடும்..ஆண்டவர் உங்களை வெற்றிக்கு வழிநடத்துவார்..உங்க கால்கள் வழி தவறாதிருக்கட்டும்.. ஒரு கப்பல், கொந்தளிக்கும் கடலிலோ, அமைதிக்கடலிலோ, வெயிலடிக்கும் பொழுதோ மழையிலோ அயராது முன் செல்வதுபோல் முன்னேறிச் செல்லுங்கள்..தளர்ந்து விடாதீங்க.. நீங்கள் நடந்து செல்ல உங்க முழங்கால்களுக்கு பெலன் தருவார்..நிமிரச்செய்வார்..உங்களை பெலப்படுத்துகிற நிமிரச் செய்கிற ஆண்டவரை பிடித்து கொள்ளுங்கள்..!!!

Pr.Mrs.Kirubai Anthony