ஒரு உணவகத்தில் ஒரு மனிதன், பரிமாறும் பணியாளரைக் கடுமையாகப் பழித்து இவ்வாறு கூச்சலிட்டான்; “உனக்கு சற்றும் கவனம் இல்லையா? நீ எங்களுக்கு சேவை செய்யவே இல்லை; திசைதிரிந்து, மனஅமைதி இன்றி இருக்கிறாய்.” அவன் உணவு உண்டிடாமலேயே அவசரமாக அங்கிருந்து வெளியேறிவிட்டான். காத்திருப்பதும் சேவை செய்வதும் ஒரு கலை மட்டுமல்ல, ஒரு திறமையும்கூட. “இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” (சங்கீதம் 123:2). இந்த நோக்கம் மரியாதையோடு, கீழ்ப்படிதல் நிறைந்த மனப்பாங்குடன், நிலைத்த தன்மையோடு, எதிர்பார்ப்புடன், தாழ்மையுடன், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்.
சார்பு (Dependence):
காத்திருப்பது சார்பையும் அடக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவனே வழங்குபவர், காப்பாளர், வழிநடத்துபவர். பணியாளரும் பணிப்பெண்ணும் தங்களுக்கு அருள் காட்டுகிறவர்களை முழுமையாகச் சார்ந்து இருக்க வேண்டியவர்களே. “எங்கள் அன்றாட அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்ற ஜெபம், சீஷர்கள் தங்கள் எல்லா பொருட்சார்ந்த, உடல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த, மனதளவான, உளவியல் மற்றும் ஆவிக்குரிய தேவைகளுக்காகவும் முழுமையாக தேவனைச் சார்ந்திருப்பதை வெளிப்படுத்துகிறது (மத்தேயு 6:11).
சுறுசுறுப்பு / முயற்சி மனப்பாங்கு (Diligence):
சுறுசுறுப்பான சேவை என்பது முழுமையான கவனம் மற்றும் ஒருமித்த மனதோடு சேவையில் நிலைத்திருப்பதையே குறிக்கிறது. கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்ற, மனம், வலிமை, திறன் மற்றும் ஆற்றல் அனைத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்துவது தான் சுறுசுறுப்பு. அது கவனச்சிதறலுக்கும் அலட்சியத்துக்கும் இடமளிப்பதல்ல. சுறுசுறுப்பானவர்கள் ராஜாக்களுக்கு முன்போ, அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களிடமோ சேவை செய்வார்கள். “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” (நீதிமொழிகள் 22:29). ஆகவே, வேலை, ஊழியம், குடும்பம், சமூகம் மற்றும் தேசம் தொடர்பாக உலகத்தில் தேவன் அளித்த அழைப்பை நிறைவேற்றும் போது, எல்லா சீஷர்களும் ஆண்டவரைச் சேவிப்பதில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
கட்டுப்பாடு / ஒழுக்கம் (Discipline):
காத்திருப்பவர்களுக்கு தேவையான திறன்கள் இருக்க வேண்டும். அவற்றில் பொறுமை மிக உயர்ந்த மதிப்பைப் பெறுகிறது. அதாவது மனச்சோர்வு, எரிச்சல் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.
ஒழுக்கம் என்பது வழக்கமான பணிகளைத் திறமையாகச் செய்வதையும், புதுமையான காரியங்களைச் சிறப்பாக நிறைவேற்றுவதையும் உள்ளடக்கியது. சிறப்பாகச் செயல்பட தேவையான தகவல்களையும் திறன்களையும் அறிந்து வைத்திருப்பதும் இதன் ஒரு பகுதியாகும். மேலும் இது உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய உடல்வலிமை (fitness) ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
மகிழ்ச்சியுடனான ஊழியம் (Delightful):
மகிழ்ச்சியுடன் செய்யப்படும் ஊழியமே / சேவையே எஜமானருக்குப் பிரியமானதாக இருக்கும். கிறிஸ்தவர்கள் எப்போதும் ஆண்டவரில் சந்தோஷமாக இருக்க வேண்டும்; எல்லாவற்றையும் ஆண்டவருக்காகச் செய்து, நன்றி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் (பிலிப்பியர் 4:4; 1 கொரிந்தியர் 10:31; 1 தெசலோனிக்கேயர் 5:18). ஞானமுள்ள பிள்ளை தந்தைக்கு மகிழ்ச்சி அளிப்பான் (நீதிமொழிகள் 15:20). அதேபோல், ஞானமுள்ள சீஷர்கள் பரலோகப் பிதாவிற்குப் பெரும் ஆனந்தத்தைத் தருகிறார்கள்.
நான் ஆண்டவரை எவ்வாறு நோக்குகிறேன்?
Rev. Dr. J.N. Manokaran