நிலநடுக்கம் மற்றும் தப்பித்தல்

நிலநடுக்கம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, கராச்சி சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம். பாக்கிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் சுவர்கள் குலுங்கியதை உணர்ந்த கைதிகள், ஆயிரக்கணக்கானோர் தங்கள் சிறை அறையின் கதவுகள், பூட்டுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து வெளியேறினர். (BBC, ஜூன் 3, 2025)

பிலிப்பி நகர சிறை:
பிலிப்பி நகரத்தில் பவுலும் சீலாவும் இதேபோன்ற அனுபவத்தை சந்தித்தனர் (அப்போ. 16:16-24). அவர்கள் நகரத்தில் கலகம் தூண்டியவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களை அடித்து, கால்களை வலுக்கட்டாயமாக விரித்தபடி வைக்கும் தொழு மரங்களில் மாட்டி வைத்து அடித்தனர்; இது சில நேரங்களில் மூட்டுகள் இடறக் காரணமாக அமையும்.

ஸ்தோத்திரமும் பாடலும்:
பவுலும் சீலாவும் அழுது வருந்துவதற்கு பதிலாக, தேவனைத் துதித்துப் பாடி ஜெபிப்பதையேத் தேர்ந்தெடுத்தனர்.

சங்கீதத்திலிருந்து ஜெபம்:
பவுல் சிறந்த யூத ஆசானான கமாலியேலின் கீழ் பயிற்சி பெற்ற ரபியாக இருந்தார். அவர் பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதியை மனப்பாடம் செய்திருந்தார். “துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.” (சங்கீதம் 119:61-62). ஆம், தீயவர்கள் அவர்களைச் சூழ்ந்திருந்த போதும், அவர்கள் நள்ளிரவில் எழுந்து தேவனைத் துதித்தார்கள்.

பதிலாக வந்த நிலநடுக்கம்:
அவர்களின் ஜெபத்துக்கு தேவன் நிலநடுக்கத்தை அனுப்பி பதிலளித்தார். எலியாவின் ஜெபத்துக்கு தேவன் அக்கினியால் பதிலளித்தார் (1 இராஜாக்கள் 18:38-39). சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை பெற்றனர்.

தற்கொலை முயற்சி:
சிறை அதிகாரி அல்லது சிறைத்துறை பொது ஆய்வாளர் அதிர்ச்சியடைந்தார். கைதிகள் தப்பித்தால் சிறை அதிகாரி மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்று ரோமப் பிரமாணம் விதிக்கிறது. சீசரின் முன்னிலையில் ரோமில் விசாரணைக்கு சென்று, அவமானத்துடன் மரணதண்டனை பெறுவதற்குப் பதிலாக, அந்தச் சிறை அதிகாரி தன்னைத்தானே கொல்ல நினைத்தார்.

பவுலின் தலையீடு: 
சிறை அதிகாரியின் நிலையை உணர்ந்து, “நாங்கள் தப்பிக்கவில்லை” என்று பவுல் உரக்கக் கூறினார். அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தும், நிலநடுக்கத்தை தங்களின் ஜெபத்திற்கு தேவன் அளித்த பதிலாகக் கருதி தப்பிச் செல்லக் வாய்ப்பிருந்தும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

சிறை அதிகாரியின் மாற்றம்:
இந்த மனிதர்கள் யார் என்று சிறை அதிகாரி ஆச்சரியப்பட்டார். அவர்களின் நடத்தை, துதி பாடல்கள், ஸ்தோத்திரங்கள், வேத வசனங்களை மனனம் செய்தது ஆகியவற்றை இணைத்துப் பார்த்தபோது, அவர்கள் தேவபக்தியுள்ளவர்கள் என்பதை அவர் உணர்ந்தார். அதனால் அவர் இரட்சிப்பின் வழியைத் தேடினார். “கர்த்தர் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசியாயிரு; அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்ற சுவிசேஷத்தை கேட்டார்.
அவர்கள் தப்பிச் செல்லாதிருந்தது, சிறை அதிகாரியையும் அவரது குடும்பத்தாரையும் தேவனின் கோபத்திலிருந்து விடுவிக்கக் காரணமானது.

 தேவ கோபத்திலிருந்து தப்பிக்க நான் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran